நாகை அருகே டொரண்ட் கேஸ் நிறுவனத்தின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிசுமையின் காரணமாக தற்கொலையா? காதல் தோல்வியா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த சீயாத்தமங்கையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் டொரண்ட் கேஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருமருகல் கண்ணுடையான் தோப்பு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மகன் தமிழழகன் ஆப்பரேட்டராக பணி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் நபருக்கு பெண் ஒருவர் போன் செய்து தமிழழகன் தூக்கு மாட்ட போகிறார் காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது பணியில் இல்லாமல் வீட்டில் இருந்ததால் உடனடியாக பணியில் இருந்த மற்ற ஊழியர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார் அந்த ஊழியர்.
அதனைத்தொடர்ந்து சக ஊழியர்கள் தமிழழகனை தேடிய போது நிறுவனத்தின் உள்ளே உள்ள இயந்திர கட்டுப்பாட்டு அறைக்குள்ளே தமிழழகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக தொங்கியுள்ளார். பின்னர் திட்டச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சம்மந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை கொடுப்பதாக அறிவித்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட்ட பாதிக்கப்பட்டவர்கள் தமிழழகன் சடலத்தை அடக்கம் செய்தனர். காதல் தோல்வியால் தற்கொலையா? பணி சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை அருகே தனியார் கேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்