மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கொண்டல் ஆற்றங்கரை தெருவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆற்றங்கரை தெருவில் மினி வாட்டர் டேங்க் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலம் அப்பகுதி பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட்டது.
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி சென்னையில் இருந்து நாகை வரை 354 கி.மீ சைக்கிளில் பயணித்த இளைஞர்
இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த மினி வாட்டர் டேங்கின் மோட்டார் பழுதடைந்தது. தொடர்ந்து அந்த மோட்டாரை பழுது நீக்கம் செய்து தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். இதனால், அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைந்து, சுகாதாரமற்ற முறையில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பம்புசெட் குடிநீரை வருகின்றனர்.
இந்ந சூழலில் மோட்டாரை பழுது நீக்கம் செய்து மீண்டும் தங்களுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி கொண்டல் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திடீரென கொண்டல் கடைவீதியில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்ணீர் வழங்க வலியுறுத்தியும், ஊராட்சி நிர்வாகத்தை எதிர்த்து கோஷம் எழுப்பினர். இதனால் மணல்மேடு - மயிலாடுதுறை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மணல்மேடு காவல்துறையினர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட வலியுறுத்தினர்.
பாஜகவின் ஓட்டுக்கும் உலை.. ஊறுகாய் பானையில் வைப்பதா வேலை? ஆளுநருக்கு முரசொலி கேள்வி!
இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அவர்கள் கூறுகையில் இன்னும் மூன்று தினங்களில் தங்களுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை எனில் தங்கள் குடும்ப அட்டையை ஒப்படைக்க போவதாக தெரிவித்துள்ளனர்.