மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி செல்லும் ரயில்களின் முக்கிய வழித்தடமாக உள்ளது. இங்கு தினந்தோறும் 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 10க்கும் மேற்பட்ட பேசஞ்சர் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் வந்து செல்கின்றன. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வரும் ரயில்கள் மற்றும் ரயில் என்ஜின்கள் டிராக்குகள் மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. முதலாவது நடைமேடைக்கு வரும் ரயில்கள் அடுத்த நடைமேடைக்கு மாற்றி இயக்கப்படும்போது ரயில் நிலையம் அருகே உள்ள மாப்படுகை ரயில்வே கேட்  மூடப்பட்டு  shunting train -ஐ (இடமாற்றம்) செய்து இயக்கப்படுகிறது. 




இந்த shunting train-ஐ காலை வேளையில் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் செல்லும் நேரத்தில் ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு ரயில்கள் மாற்றப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.  இந்நிலையில் இன்று  திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு முதலாவது நடைமேடைக்கு வந்த பாசஞ்சர் ரயில் மாலை 3.40 மணிக்கு  ஐந்தாவது நடைமேடையில் இருந்து விழுப்புரம் செல்ல வேண்டும். அதற்காக காலை 9.15 மணிக்கு shunting train -ஐ (இடமாற்றம்) செய்வதற்காக மாப்படுகை ரயில்வே கேட் பொதுமக்கள் செல்லும் பீக் அவர்சில் ரயில்வே கேட் மூடப்பட்டது. 




இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த ரயிலை மீண்டும் ரயில் நிலையம் செல்லாதவாறு தண்டவாளத்தில் அமர்ந்து தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். மாலை 3 40 மணிக்கு விழுப்புரம் செல்ல உள்ள ரயிலை காலை 9 மணிக்கு பீக் அவர்சில் இயக்குவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறைபுகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். தொடர்ந்து தகவல் அறிந்து வந்த ரயில்வே நிலைய மேலாளர் சங்கர்குரு, ரயில்வே இன்ஸ்பெக்டர் சுதிர்குமார். மயிலாடுதுறை நகர காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் ரயிலை விடுவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.




மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை!


வங்கக்கடலில் மாண்டலர் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் 7 -ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்டமீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


TN Rain Alert: உருவாகும் மாண்டஸ் புயல்.. 9ஆம் தேதி கொட்டித் தீர்க்கப்போகும் மழை.. எச்சரிக்கும் வானிலை மையம்..




கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு காவல் நிலைய போலீசார் தரங்கம்பாடி, சீர்காழி, பூம்புகார், பழையார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Distance Learning Teacher: தொலைதூரக் கல்வி: ஆய்வுக்கு உட்படுத்துங்க.. - நீதிமன்ற உத்தரவால் பதறும் ஆசிரியர்கள்!