பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை இன்று சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் தொடங்கி வைத்தனர். 




அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 427 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 30 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். 


Koyambedu Special Pongal Market : கோயம்பேட்டில் பொங்கல் சிறப்புச் சந்தை.. விவரம் இதோ..




மேலும், இன்று முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை நடுத்தர வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் 5 கிலோ எடையுள்ள சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஏழை எளிய வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 5 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படுவதை வாங்கி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் எல்பிஜி சிலிண்டர்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா, நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் வழங்கினர். இந்நிகழ்வில் ஏராளமான பயனாளிகள் பொங்கல் பரிசு தொகை வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி மாநில முழுவதும் இருந்து 300 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!


மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் மயிலாடுதுறை டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் ஏகலைவன் டிரோபி - 2023 என்ற பெயரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 




சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் சூப்பர்-சீனியர், அனைவருக்குமான போட்டிகள் மற்றும் இளைஞர்களுக்காண போட்டிகள் என்று ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன 10 போர்டுகள் வைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 10 போட்டிகள் நடத்தப்பட்டன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பார்வையாளர்கள் போட்டிகளை கண்டு ரசித்தனர்.