விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் பண்டிகைக்கு  நேரடியாக மோதுவது ரசிகர்களிடையே பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கும் சரிசமமாக திரையரங்குகள் சமமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இருதரப்பு ரசிகர்களும் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர். 




அந்த வகையில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர உள்ள விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒன்றாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இன்னும் இரு தினங்களில் திரையிடப்பட உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் இன்று விஜய் ரசிகர்கள் மயூரநாதர், அபயாம்பிகை அம்பாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர். 




தொடர்ந்து, விநாயகர் சன்னதியில் திரைப்படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கி  படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு நடத்தினர். இதேபோன்று  திருப்பதி கோயில் மயிலாடுதுறை விஜய் ரசிகர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுப்பட்டனர். மயிலாடுதுறை நகர விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பாக நடிகர் விஜயின் 66 - வது திரைப்படமான வாரிசு திரைப்படம் வெள்ளி விழா காண வேண்டும் என விஜய் ரசிகர்கள் திருப்பதி வெங்காசலபதி கோயிலுக்கு சென்று இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் செய்துள்ளனர்.




மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி ஊராட்சியில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினரின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கோடங்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி ஊராட்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினரின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் புனிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அவரிடம் பொதுமக்கள் கோடங்குடி கிராமத்தில் இருந்து மகப்பேறு உள்ளிட்ட தேவைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல, காளி கிராமத்துக்கும், அவசர சிகிச்சைக்கு அரசினர் மருத்துவமனைக்கு 8 கிலோ மீட்டர் தூரமும் செல்ல வேண்டி இருப்பதால், கோடங்குடி கிராமத்திலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்றும், ரேஷன் கடையை தினமும் திறக்கவும், பேருந்து வசதி, சாலை வசதி, மயான சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தினர். 




மேலும், இக்கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, சுகாதாரத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்கள் துறையின் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர். முகாமில் கால்நடைத்துறை சார்பில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.