சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (Chennai Metropolitan Development Authority) சார்பில் கோயம்பேடு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், பொங்கல் சிறப்புச் சந்தை அமைக்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. கேசர்பாபு தெரிவித்துள்ளார். 


பொங்கல் விழாவுக்கு மக்கள் தயாராகி வருகின்றன. சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட உள்ள சிறப்புச் சந்தை குறித்து 
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது,  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 


பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பி.கே. சேகர்பாபு பேசியதன் விவரம்:


”கோயம்பேடு சந்தையின், மலர் வணிகப் பகுதியில் ஏற்கெனவே திறக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் பணியாளர்கள் தங்கும் விடுதி, உணவு தானிய வணிகப் பகுதி, ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் வியாபாரத்துக்கு உட்படுத்தாமல் உள்ள கடைகளின் நிலை உள்ளிட்டவை குறித்தும், திறந்த வெளி பகுதிக்கென (ஓ.எஸ்.ஆர்.) ஒதுக்கப்பட்ட இடங்களை மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்தும் கள ஆய்வு மேற்கொண்டோம்.


 கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் வரும் பிப்ரவர் மாதத்திற்குள் முழு ஆய்வையும் மேற்கொண்டு,அதன் மேம்பாட்டு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


பொங்கல் சிறப்புச் சந்தை வாகனம் நிறுத்துமிடத்தில், 3.5 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அங்காடி சார்பில் அமைக்கப்பட உள்ளது. கோயம்பேடு அங்காடி கழிவுகளைப் பயன்படுத்தும் வகையில் மாஸ்டர் ப்ளான் தயாரிக்கப்பட இருப்பதாகவும்” அமைச்சர் தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது, பிரபாகரராஜா எம்எல்ஏ, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மைச் செயல் அலுவலர் எம்.லட்சுமி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.




மேலும் வாசிக்க..


ஆளுநர் உரையில் வார்த்தைகள் தவிர்ப்பு.. ஆளுநர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்..


தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தார்.. அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..