மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் உள்ள  36 வார்டுகளில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பாதாளசாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.  பாதாளசாக்கடை பராமரிப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி பராமரித்து வருகிறது. இந்நிலையில்  தரமற்ற முறையில் பாதாளசாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் இணைப்புகளுக்கான இத்திட்டத்தில் அளவுக்கதிகமாக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். 


Kitkat கவர்களில் கடவுள் ஜெகன்நாதர் புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை… பதிலளித்த நெஸ்லே..




பூச்சி மருந்து குடித்து +2 மாணவி தற்கொலை - மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தியதாக பள்ளி மீது புகார்


இந்ந சூழலில் கடந்த 3 ஆண்டுகளாக அவ்வப்போது பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு குழாய் செல்லும்  சாலைகளில் பெரிய பள்ளம் ஏற்பட்டுவது தொடர்ந்து வருகிறது. கச்சேரிரோடு, கண்ணாரத்தெரு, நகராட்சி அலுவலகம் எதிரே, தரங்கம்பாடி சாலை, தைக்கால்தெரு, கொத்தத்தெரு, சுமைதாங்கி, திருவாரூர் சாலை என்று 15 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் திடீரென்று உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டுவதும் அதனை தற்காலிகமாக சரிசெய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. பாதாளசாக்கடை பிரச்சனையால் மயிலாடுதுறையில் உள்ள 36 வார்டுகளிலும் கழிவுநீர் பல்வேறு சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.


தாய் மாமன் மகளையே மணந்து மாப்பிள்ளையான கிரிக்கெட்டர்கள் யார்? யார்? தெரியுமா?




இந்நிலையில் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானம் முன்பு தருமபுரம் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனை கண்டித்து இன்று பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா - அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறிய திமுகவினர்




மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வீதிகளில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்ற தற்காலிக நடவடிக்கை கூட எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் 3 ஆண்டுகளாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாள சாக்கடை குழாய் அடைப்புகளை சரி செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், இல்லை என்றால் பாமகவினரே பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வோம் என்று ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் தெரிவித்தனர் .


ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்