தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் 648 மனுக்களை பெற்ற கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
குறைதீர் கூட்டத்தில் 648 மனுக்கள் குவிந்தன
இதில் இலவச வீட்டுமனைப் பட்டா. முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 648 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய சம்பந்தப்பட்ட அவர்களிடம் வழங்கினார்கள். நடவடிக்கைகள் அலுவலர்களுக்கு உடனடியாக மாவட்ட இம்மனுக்கள் மீது மேற்கொள்ளுமாறு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்கள்.
மேலும், குவைத் நாட்டில் பணியில் உள்ள போது இறந்த, தஞ்சாவூர் மாவட்டம், பூதலுர் வட்டம், பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்த (லேட்) இளங்கோவன் கந்தசாமி என்பவருக்கு சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத்தொகையான 20,84,491 மதிப்பிலான காசோலையை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாக மற்றும் இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குத்தகை சாகுபடியில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
இந்த குறைதீர் கூட்டத்தில் குத்தகை சாகுபடி தொடர்பாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புள்ளமாங்குடி பகுதியை சேர்ந்த மூன்று பேர் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ஒன்பத்துவேலி அஞ்சல் புள்ளமாங்குடி பகுதியைச் சேர்ந்த சங்கர், ரவிச்சந்திரன் திரவியம் ஆகியோர் அளித்த மனுவில் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பண்டாரவடை, தெற்குத்தெரு பகுதியில் வசித்துவரும் அப்துல் ஜாப்பருக்கு சொந்தமான மேலசெம்மங்குடி பகுதியில் விவசாய நிலம் உள்ளது. கடந்த 1976ம் ஆண்டிலிருந்து நாங்களும், எங்களது அப்பா கோவிந்தசாமியும், அவர் இறந்த பிறகு அவரது மகன்களாகிய பன்னீர்செல்வம், ரவிச்சந்திரன், திரவியம் நாங்கள் மூவரும் சேர்ந்து குத்தகை சாகுபடி செய்து வருகிறோம்.
இந்நிலையில் எங்களுக்கு தெரியாமல் அப்துல் ஜாப்பர் என்பவரின் வாரிசுகள், நாங்கள் குத்தகை சாகுபடி செய்து வந்த அப்துல் ஜப்பாருக்கு சொந்தமான தஞ்சாவூர் மாவட்டம் மகர்நோம்புச்சாவடி, மிஷன் 3வது தெரு முகவரியில் வசித்து வரும், பாலஸ் அவர்களின் மகன் தங்ககுமார் என்பவர் எங்களுக்கு தெரியாமல் கிரயம் செய்து செய்துள்ளார். நாங்கள் நில உரிமையாளரின் வாரிசுகளான பீஜான்பீவி, நூர்ஜகான், சபுராஷீரின் ஆகிய மூவரிடமும், கேட்டபோது நீங்கள் குத்தகை சாகுபடி செய்த நிலத்தை யாரிடமும் விற்கவில்லை என்று கூறினார்கள்.
தங்ககுமார் என்பவர் நிலத்தை வாங்கும்போது நாங்கள் குத்தகை செய்த நிலத்தின் சர்வே நம்பருடன் சேர்த்து போலியாக பத்திரம் பதிவு செய்துள்ளனர். இது போன்ற நிலத்தினை மோசடி செய்த தங்ககுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படும் நில உரிமையாளர்கள் மற்றும் அவருக்கு உதவியாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.