தமிழகத்தில் பல பாரம்பரிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் தொடர்ந்து 4 நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நமக்கு முக்கிய பண்டிகையாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்த வார இறுதியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வழக்கம் போல விமர்சையாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் குடும்பத்தினருடன் வீட்டிலேயே உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராக உள்ளனர். ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த பல சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகின்றன. சீரியல்களை தவிர்த்து வார இறுதி நாட்களில் பல ரியாலிட்டி ஷோக்களும், பிளாக் பஸ்டர் படங்களும் ஒளிபரப்படுவது வழக்கம்.
மேலும், ஒவ்வொரு சேனல்களும் பல புதிய படங்களை ஒளிபரப்புவதும் வழக்கம். அதுவும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் தொலைக்கட்சிகளுக்கு யுத்தக்களமாக இருக்கும். போட்டிபோட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை, "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" என்று இழுத்து இழுத்து பேசி மக்களின் கவனத்தை இழுத்துக்கொண்டிருப்பார்கள்.
அதற்காகவே திரைப்படங்களை வெளியீட்டின்போது சாட்டிலைட் உரிமை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவும். பெரிய ஹீரோ படங்கள் வெளியீட்டிற்கு முன்பே விற்றுவிடும். இந்த வருட பொங்கல் விழாவிற்கு ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் என்னென்ன புதிய திரைப்படங்கள் இறங்குகிறார்கள் என்று பார்க்கலாம்.
பொங்கலுக்கு புதிய திரைப்படங்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு திரைக்கு வந்த புத்தம் புதிய மெகாஹிட் திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளது ரசிகர்களின் அபிமான சேனலாக இருந்து வரும் சன் டிவி.
ஜனவரி 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை தினத்தன்று மாலை 6 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான "அண்ணாத்த" மெகாஹிட் திரைப்படம் சன் டிவி-யில் ஒளிபரப்பாக இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சன் டிவி-யின் அதிகார்பூர்வ சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டுள்ளதோடு, நிகழ்ச்சி இடைவேளைகளின் போதும் சன் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
Also Read | Pongal 2022 Wishes: தமிழில் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்… ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வாழ்த்து அட்டைகள்!
அதுபோல கலைஞர் தொலைக்காட்சி சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை வரும் ஜனவரி 15ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை வரும் ஜனவரி 16-ஆம் தேதி பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் தொலைக்காட்சி ஆனபெல் சேதுபதியும், ஜீ தமிழ் தொலைக்காட்சி டிக்கிலோனா மற்றும் தலைவி திரைப்படங்கள் ஒரிபரப்புவதாக ப்ரோமோக்கள் வெளியிட்டுள்ளனர்.
சன் டிவி
அண்ணாத்த
மாஸ்டர்
ராஜவம்சம்
கலைஞர் டிவி
ஜெய்பீம்
சார்பட்டா பரம்பரை
அரண்மனை 3
விஜய் டிவி
ஆனபெல் சேதுபதி
நெற்றிக்கண்
ஜீ தமிழ்
டிக்கிலோனா
தலைவி