தஞ்சை-கும்பகோணம்-விக்ரவாண்டி வரை சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஒரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட நேரம் பயணமாகும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி முதல் தஞ்சை வரையிலான 165 கிலோ மீட்டர் நீளமுள்ள  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ்,நான்கு வழிச்சாலையாக கடந்த 2006 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.


இதனையடுத்து 2010 ஆம் ஆண்டில் திட்டமதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டில் விக்கிரவாண்டி  தஞ்சாவூர் சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் அமைக்க 1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டு,  விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு 3,517 கோடியை கூடுதலாக ஒதுக்கியது.


பின்னர் கடந்த 2018 ஏப்ரல் மாதங்களுக்கு முன்பு தொடங்கிய சாலை பணி மூன்று பகுதிகளாக பிரித்து  தொடங்கப்பட்டுள்ளன.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், தனியார் ஒப்பந்தத்தின் மூலம் விக்ரவாண்டி சேத்தியாத்தோப்பு வரை முதல் கட்டமாகவும், சேத்தியாத்தோப்பு முதல் சோழபுரம் வரை இரண்டாம் கட்டமாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சை வரை மூன்று கட்டமாக பணிகள் ஒதுக்கப்பட்டு தொடந்து பணிகள் நடைபெற்று வந்தது. 




இதில் முதல் கட்டமாக விக்ரவாண்டி சேத்தியாத்தோப்பு வரை 711 கோடி மதிப்பீட்டில் 66 கி.மீ. நீளத்தில் சாலை அமைக்கப்பட்டும், இரண்டாம் பகுதியான சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் தாராசுரம் வரை 1,461 கோடியில் 50.275 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பின்னலூர்  சேத்தியாதோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள் என 16 கி.மீ. நீளத்துக்கு புறவழிச்சாலைகளும், 100 கோடியில் அணைக்கரை பாலம் உள்பட 34 ஆற்றுப்பாலங்களும், ஜெயங்கொண்டம் கூட்ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி, சோழகத்தரம் உள்ளிட்ட பகுதிகளில் 23 மேம்பாலங்களும்,  ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டு வந்தது. 






இந்தநிலையில், விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரை மத்திய அரசு நிதியுதவியுடன் 3,517 கோடி ரூபாய் மதிப்பில் நாற்கர சாலை திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய்க்கு பழைய பாலத்திற்கு பதிலாக புதிதாக கட்டப்பட்டு வரும் ‘அணைக்கரை’ இணைப்பு பாலம் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 






முன்னதாக இதேபோல், கடந்த நவம்பர் மாதம் தஞ்சாவூர் மாவட்டம் அன்னப்பன்பேட்டை அருகே செல்லும் நான்கு வழிச்சாலையில் தொடர் மழை காரணமாக திடீரென சாலை சுமார் ஒரு அடிக்கு மேல் உள்வாங்கியது. அந்த புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண