மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் நிலத்தடி நீரினை நன்னீராக மாற்றம் செய்திடும் முயற்சியாக  5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளம் வெட்டும் பணியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி ஊராட்சியில் 149 குளங்களை வெட்டிய மெகா பவுண்டேஷன் நிமல்ராகவன் ஒத்துழைப்போடு நிலத்தடி நீரினை நன்னீராக மாற்றம் செய்திடும் முயற்சியாக ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் குளம் வெட்டும் பணியை  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.




சுமார் 5 லட்சம் மதிப்பீட்டில் 1.97 ஹேக்டர் பரப்பளவில் 60 மீட்டர் நீளம், 50 மீட்டர் அகலம், 5 அடி ஆழத்தில் குளம் வெட்டப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், தமிழகத்தில் இவ்வாண்டு தன்னார்வலர்களின் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் நீர்நிலைகளை சிறந்த முறையில் பராமரித்து  பாதுகாப்பவர்கள் 100 பேருக்கு தமிழக முதல்வர் விருதினை வழங்கி சிறப்பிக்க உள்ளார் என்றும், என்னுடைய சொந்த ஊரில் 1500 அடிக்க கீழேதான் தண்ணீர் உள்ளது. எங்கள் ஊரிலும் இந்த தொண்டு நிறுவனத்தினரால் 60 வது நாளாக குளம் வெட்டப்பட்டு வருகிறது.


PS 2 Box Office Collection: அடேங்கப்பா..! இதுவரை ரூ.300 கோடி.. வசூலை வாரிக்குவிக்கும் பொன்னியின் செல்வன் 2..!




ஆண்டு தோறும் எங்கள் ஊரில் 30 லட்சம் செலவு செய்து ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டு அந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தாமல் அந்தத் தொகையை கொண்டு நீர் நிலைகளை மேம்படுத்துவதற்காக ஊரில் உள்ள 10 குளங்களை வெட்டி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மக்கள் பயன்பெறுவதற்காக பணிகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.


10th Result Date 2023: திடீர் அறிவிப்பு; 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி மாற்றம்- அமைச்சர் அன்பில் பேட்டி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண