கும்பகோணம் மாத்தி கேட்டு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி அம்மாள்

  (70), இவரது கணவர்  சந்திரசேகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 5 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இதில் 7 ஆவது மகனான பழனியை தவிர மற்ற 6 பேருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். பழனி, மெடிக்கல் ரெப்பாக வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஒரு பெண்ணை காதலித்து அந்த காதலியால் கைவிட்டதால், பழனி மனஉலைச்சலில் இருந்ததுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தஞ்சையிலிருந்து கும்பகோணத்தை நோக்கி, பைக்கில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு அவரது தலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.




இதனால் அவருக்கு  மனநிலை பாதித்துள்ளதால், அதற்கு தேவையான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். ஆனாலும், மகன் மேல் உள்ள பாசத்தால், தாய் சரஸ்வதி அம்மாள்,  மகனை மனநல காப்பகத்தில் சேர்க்காமல் தன் அரவணைப்பிலேயே பாசத்துடன் மாத்திரைகளை கொடுத்து, பாதுகாப்புடன்  கவனித்து வந்தார். இந்நிலையில், அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற பழனியை தடுத்து நிறுத்தி வெளியே செல்லாதவாறு பார்த்துக் கொண்டார்.  இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். சில மணி நேரங்களில் தாயும் மகனும் சமரசமாகி விடுவார்கள்.  பழனி கடந்த இரண்டு நாட்களாக மனநல நோய்கான, மாத்திரைகளை சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே செல்ல, பழனி முயன்றுள்ளார். ஆனால் தாய் சரஸ்வதி அம்மாள், மகன் பழனியை, வெளியில் செல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. எப்போதும் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  ஆத்திரத்தின்  பழனி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியை கிழித்து உள்ளார். இதில் சரஸ்வதி அம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.




தாய் இறந்தது தெரியாமல் அவர் அருகிலேயே இரவு முழுவதும் படுத்து துாங்கி விட்டு, அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி சென்ற, பழனி, தனது தாய்  சரஸ்வதி அம்மாளை, கத்தியால், கழுத்தை அறுத்து விட்டேன். எழுந்திருக்கவில்லை என, உறவினர்களிடம், பழனி தெரிவித்தார். இதனையடுத்து, பழனியின் வீட்டிற்கு வந்த உறவினர்கள், ரத்தவெள்ளத்தில் கிடந்த சரஸ்வதி அம்மாள் கொலை செய்தது குறித்து, பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி, மனநலம் பாதிக்கப்பட்ட பழனியை அழைத்து சென்றனர்.


இதுகுறித்து  போலீசார் கூறுகையில், பழனி  மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து பழனியின் மனநிலை நோய் தன்மை குறித்து அறிய அரசு மருத்துவமனையில் உள்ள மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல உள்ளோம். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். மருத்துவர்கள் அளிக்கும் அறிக்கையின் பொருட்டு அவர் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அவரை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பதற்கு கொண்டு செல்லப்படுவார் எனவும், அல்லது மனநிலை தன்மை குறைவாக உள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் என தெரிவித்தனர்.




இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், காதல் தோல்வி, விபத்து ஆகியவைகளால், மனநல பாதிக்கப்பட்ட பழனியின், 6 பேருடன் பிறந்திருந்ததால், அவர்கள் அனைவரும், தாயுடன், தன்னை விட்டு விட்டு சென்றதால், தனிமையில் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு, பழனி வீட்டிலிருந்து வெளியில் சென்று வருவதாக தாயிடம் கூறியுள்ளார். தாய் சரஸ்வதி அம்மாள், மகனை வெளியில் செல்லக்கூடாது என்று கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது, மகன் பழனியை கண்டிக்க வேண்டும் என கழுத்தை பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமைடைந்த பழனி, பழங்களை அறுப்பதற்காக வைத்திருந்த கத்தியால், சரஸ்வதி அம்மாளின் கழுத்தையும் வயிற்றை கீழித்தார். இதில் சம்பவ இடத்திலேயே சரஸ்வதி அம்மாள் உயிரழந்தார். ஆனால் பழனிக்கு தாய் இறந்தது தெரியாமல், அருகிலேயே துாங்கி விட்டு, காலையில் எழுந்து நடைபயிற்சி சென்று, உறவினர்களிடம் கூறிய பின் தான் அனைவருக்கும் தெரிந்தது என்றார். தாயை கொலை செய்து விட்டு அவர் இறந்தது தெரியாமல் அவர் அருகிலேயே மகன் படுத்திருந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.