ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு அடையாள சின்னங்கள் இருந்து வருகிறது. ஒரு ஊரை பற்றி ஒரு காட்சிப் படுத்தி கூற  வேண்டுமென்றால் முதலில் அந்த ஊரை குறிக்கும் அடையாள சின்னத்தை தான் காட்சிப் படுத்துவார்கள். அந்த வகையில் அந்த அடையாள சின்னம் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், பெற்று பெருமை கொண்டதாகவும் இருக்கும். அத்தகைய சிறப்பு மிக்க அடையாள சின்னங்களை அரசு சார்பில் உரிய முறையில் பராமரிக்க பட்டுவது வழக்கம்.


நெய்வேலி, பண்ரூட்டியில் மார்க்சிஸ்ட்டுகள் சாலை மறியல் - விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை




அந்த வகையில் மயிலாடுதுறை கடைவீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு 1943  ஆம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய சென்னை மாநில ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரரால் திறந்து வைக்கப்பட்டது. உலகப் போரில் இங்கிலாந்து தொடர்ந்து தோல்வி அடைந்தது. போர் நடந்த எல்லா இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதன் முறையாக டுனீசியாவில் நடந்த போரில் ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக மயிலாடுதுறை மணிக்கூண்டை அப்துல் காதர் என்பவர் கட்டினார். 




வார நாட்களில் நடத்துனர்; விடுமுறை நாட்களில் கூலித் தொழிலாளி - மனிதநேய நடத்துனர் ஷாட்டேஜ் பாபுவின் கதை


அதன் பின்னர், மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களின் ஓன்றாக இந்த மணிகூண்டு மாறிவிட்டது. அந்த காலத்தில் இந்த மணிக்கூட்டில் உள்ள கடிகாரத்தை பார்த்தே மக்கள் நேரத்தை தெரிந்துகொண்டனர்.  இதில் உள்ள கடிகாரம் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருந்தது. இது தொடர்பாக பல முறை பொதுமக்கள்  நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலட்சியம் படுத்தி வந்துள்ளது. 


Samantha dress price : அசர வைத்தது சமந்தா மட்டுமல்ல.. அவரது உடையின் விலையும்தான்..! இத்தனை லட்சமா?




இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அப்பகுதி 16 வது வார்டு திமுக நகரமன்ற உறுப்பினரான 23 வயது பட்டதாரி இளைஞரான சர்வோதயன் என்பவர் தனது சொந்த செலவில் மணிகூட்டில் உள்ள கடிகாரத்தை சரிசெய்து கொடுத்துள்ளார். மேலும் மணிக்கூண்டில் பல ஆண்டுகளாக எரியாமல் இருந்த மின் விளக்கையும் அவர் சரி செய்து தந்துள்ளார். இவரது இந்த செயலை மயிலாடுதுறை பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Car loan Information:

Calculate Car Loan EMI