மயிலாடுதுறையில் டோக்கனுக்கு 20 ரூபாய் வீதம் பஞ்சி விவசாயிகளிடம் லஞ்சம் வசூல் செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை அரசு அலுவலகங்களின் வாயில் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் பருத்தி பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.




இந்த நிலையில் மயிலாடுதுறை டெல்டா விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் சோழம் பேட்டையில் பஞ்சு விற்பனை செய்ய வரும்  விவசாயிகளிடம் டோக்கனுக்கு இருபது ரூபாய் லஞ்சம் பெறுவதாக அச்சிடப்பட்டு மயிலாடுதுறை அரசு அலுவலகங்கள் வாயில் சுவற்றில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.  அந்த போஸ்டரில் சோழம் பேட்டை பஞ்சு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் சி எம் எஸ் மணிகண்டன் மீது நடவடிக்கை எடு, பஞ்சு போட வரும் நபர்களிடம் டோக்கனுக்கு இருபது ரூபாய் வீதம் வாரத்திற்கு 2000 டோக்கனுக்கு மேல் ரூபாய் 40 ஆயிரம் வசூல் செய்யும் மணிகண்டன் மீது நடவடிக்கை எடு என்ற வாசகங்களுடன்,


TNPSC Free Coaching: சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; கலந்துகொள்வது எப்படி?




மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வருவாய் துறை அலுவலகங்கள் வாயில் சுவர்களில் மற்றும் நகர் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த வாரம் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் அரசு அலுவலர்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.