மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூர் நத்தம் ஜெயராஜ் நகரில் அய்யனார்கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டு காலமாக இந்த குளத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக குளத்திற்கு தண்ணீர்வரும் வாய்க்கால், வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துபோய் மழைகாலங்களில் தண்ணீர் நிரம்பி தேங்கி நிற்கும். நீர் வடிவதற்குகூட வழி இன்றி இருந்து வருகிறது. 




மேலும் குப்பைகள் சேர்ந்து தண்ணீர் மாசுப்பட்டு துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதனை அடுத்து அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். இந்த சூழலில்  திடீரென மேலமங்கைநல்லூரை சேர்ந்த சில மிராசுதார்கள் குளம் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், உங்களுக்கு இதில் உரிமையில்லை என்றும் கூறி ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 5 பேர் மீது பெரம்பூரில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Shinzo Abe: மேடையில் பேசிக் கொண்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; உயிரிழந்ததாக தகவல்?




அதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனை தொடர்பாக குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி வரும் அய்யனார்கோயில் குளத்தை அந்தபகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த கிராம மக்களை பராமரித்து பயன்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டுமென்று என கூறி அக்கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர். குளத்திற்காக கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.




இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல ஆண்டு காலமாக அவ்வூர் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் இந்த குளத்தை தற்போது பயன்படுத்த கூடாது என தடுப்பது ஏற்புடையது அல்ல என்றும், குறிப்பாக ஆதி திராவிடர் இன மக்கள் பயன்படுத்தி வரும் குளத்தினை தடுப்பது, தீண்டாமையாக கருதப்படும் எனவும் இதனால் மேலும் பெரும் பிரச்சனை ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து குளத்தினை அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் அரசு சார்பில் தூர்வாரி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண