ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) மீது துப்பாக்கிச் சூடு. உடனடியாக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அதிபரை சுட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரா (Nara) நகரில் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த ஷின்ஸோ அபேவை பின்னால் இருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது நிகழ்ச்சி நடந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷின்ஸோ அபே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஷின்ஸோ அபே நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறிது ஜப்பான் போலீஸ் கூறுகையில், துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டது; உடனடியாக அவருக்கு இரத்தம் வந்ததையெடுத்து அபேவிற்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு மருத்துவமைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றார்.
வாளியை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்