மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை 25வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளவர் அபிராமி வெங்கடேசன். வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணியன் வயது முதிர்வு காரணமாக கடந்த 2021 -ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, ஆண்டுதோறும் தந்தையின் நினைவாக அவர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் கிராமமக்களுக்கு நல உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், வெங்கடேசன் தனது தந்தையாரின் நினைவைப் போற்றும் வகையில், அகரகீரங்குடி கிராமத்தில் தந்தை சுப்பிரமணியனுக்கு முழு உருவச் சிலை அமைத்து, மணி மண்டபம் எழுப்பியுள்ளார்.




இந்த மணிமண்டபத்தை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் திறந்து வைத்து, அகரகீரங்குடி, பட்டமங்கலம், முட்டம், சிறுகோவங்குடி, ஊர்குடி ஆகிய 5 கிராமங்களில் வசிக்கும் கிராம பொது மக்களுக்கு நல உதவிகள் வழங்கினார். மேலும், இந்த 5 கிராமங்களில் வசிக்கும் 30 -க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் 2000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில், கிராமமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு நலஉதவிகளை பெற்றுச் சென்றனர்.


Rajya Sabha Election: மாநிலங்களவை உறுப்பினராகும் வெளியுறவுத்துறை அமைச்சர்; குஜராத் காந்தி நகரில் வேட்பு மனு..!




வயது முதிர்ந்து வீட்டில் இருக்கும் பெற்றோரை ஒரு சுமையாக  என்னி பராமரிக்கவே இக்கால இளைஞர்கள் தயங்கும் நிலையில், உயிரிழந்த தனது தந்தையின் நினைவாக அவருக்கு சிலை எழுப்பி, மணி மண்டபம் அமைத்து நலஉதவிகளை வழங்கிய ஒன்றிய கவுன்சிலர் அபிராமி வெங்கடேசனை கிராம மக்கள்  வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிகழ்வில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.












ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண