வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத்தின் காந்திநகரில் இருந்து ராஜ்யசபாவுக்கு இன்று அதாவது ஜூலை 10ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். கோவா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 10 ராஜ்யசபா (மாநிலங்களவை) தொகுதிகளுக்கான தேர்தல் ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.


மாநிலங்களவை உறுப்பினர்களின் ஓய்வு காரணமாக மக்களவையில் காலியாக உள்ள 10 இடங்களில் விண்ணப்பிப்பவர்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையன் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் உள்ளனர்.


காலியாக உள்ள ராஜியசபா இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 13 கடைசி நாளாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 


ஜெய்சங்கர் 2019 ஆம் ஆண்டு குஜராத்தில் இருந்து மக்கள்வைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு  அமைச்சராக பதவியேற்றார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து குஜராத்தில்  இரண்டு இடங்கள் காலியாகின.


182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜகவின் பலம் 156 ஆக உள்ளது.


மாநிலங்களவை உறுப்பினர்களான டெரெக் ஓ பிரையன், டோலா சென், பிரதீப் பட்டாச்சார்யா, சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி, சுகேந்து சேகர் ரே ஆகியோர் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் இருந்து ஆறு ராஜ்யசபா இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 


182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில் போதிய எம்எல்ஏக்கள் இல்லாததால், 3 மாநிலங்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று காங்கிரஸ் வெள்ளிக்கிழமை அதாவது ஜுலை 7ஆம் தேதி கூறியது.


கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 156 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது, அதே சமயம் காங்கிரஸ் 17 இடங்களை மட்டுமே பெற்று  குஜராத் மாநில தேர்தலில் மிகவும் மோசமான தேர்தல் முடிவுகள்ஐ எதிர்கொண்டது. 


குஜராத்தில் உள்ள 11 ராஜ்யசபா தொகுதிகளில், தற்போது 8 பாஜக வசம் உள்ளது, மீதமுள்ளவை காங்கிரஸ் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளார்.