தமிழறிஞர் சீகன்பால்க் ஜெர்மனியிலிருந்து தரங்கம்பாடிக்கு 1706 -ம் ஆண்டு வருகை தந்தார். தரங்கம்பாடியில் தமிழ் மொழியை கற்று, தரங்கம்பாடியில் இயந்திரம் மூலம் இயங்கும் அச்சகம் மற்றும் காகித ஆலை அமைத்து ஜெர்மன் மொழியிலிருந்து பைபிளை இந்தியாவிலேயே தமிழில்  முதன்முதலாக மொழி பெயர்த்து காகிதத்தில் அச்சேற்றி வெளியிட்டார். மேலும், ஓலைச்சுவடியிலிருந்த தமிழ்நூல்களான திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்ட பழம்பெரும் நூல்களை காகிதத்தில் அச்சேற்றி நூலாக வெளியிட்டார். 




தொடர்ந்து 1708 -ல் கல்விக்கூடம் அமைத்தார். பெண்களுக்கென தனி பள்ளிக்கூடம், விடுதி போன்றவற்றை அமைத்து அதில் விதவைகளை ஆசிரியர்களாக நியமித்தவர் தமிழறிஞர் சீகன் பால்க். இவர் தரங்கம்பாடிக்கு வந்த 317 -ஆம் ஆண்டு தினம் தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சீகன்பால்க் தமிழில் மொழி பெயர்த்த பைபிளை சீகன்பால்கு ஆன்மிக மன்றம், வேதாகம நண்பன் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் வேதாகமத்தை கையால் எழுதும் சாதனை நிகழ்ச்சி, தரங்கம்பாடி புது எருசலேம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. 


OP Soni Arrest: அளவுக்கு அதிகமாக சொத்து… பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.சோனி கைது!




தொடர்ந்து 2 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வில் 1200 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்று 1464 பக்கங்கள் உள்ள வேதாகமத்தை கையால் எழுதினர். இந்த சாதனை நிகழ்ச்சியை துவங்கி வைத்த தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை பேராயர் கிறிஸ்டியான் சாம்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வருகை தந்த 317 -வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. அவர் வருகையை நினைவு கூறும் வகையில் சீகன்பால்க் தமிழில் மொழி பெயர்த்த பைபிளின் தமிழ் மொழியாக்கத்தை கையெழுத்து வேதாகம சாதனை நிகழ்ச்சியாக 2 மணி நேரத்தில் 1200 க்கும் மேற்பட்ட நபர்கள் எழுதி சாதனை படைத்தனர். 


Actor Dhanush Case: நடிகர் தனுஷ் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!




1715 -ல் சீகன்பால்க் தமிழில் அச்சடித்த பைபிளின் ஒரு பிரதி தஞ்சாவூர் மியூசியத்தில் இருந்து களவாடப்பட்டு லண்டன் மியூசியத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது. யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி அந்த பைபிளை தமிழகத்திற்கு விரைவில் கொண்டு வந்து சீகன்பால்கு வாழ்ந்த அவரது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தரங்கம்பாடி சீகன்பால்க்   மியூசியத்தில் வைக்க வேண்டும், சீகன்பாகுவின் நினைவாக தரங்கம்பாடியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், 1986 -ல் நிறுத்தப்பட்ட தரங்கம்பாடி- மயிலாடுதுறை ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும்" என்று பேராயர் வேண்டுகோள் விடுத்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்