ஒரு தொழிலில் வெற்றி அடைய எத்தனையோ புத்தகங்களை படித்து அறிவை வளர்த்திருந்தாலும், நாம் செய்யும் தொழிலில் நாம் புதிய யுத்திகளை கையாண்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். அவ்வாறான  ஒரு யுக்தியை வெளிப்படுத்தி வெற்றியடைந்த பலரையும் நாம் கண்டு வருகிறோம். அதுபோன்று ஓர் உணவகத்தில் புதிய யுக்தியை முயற்சித்துள்ளார் மயிலாடுதுறையில் ஒருவர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு காக்கும் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த தம்பதி வெங்கடேஷ் - சிவ பார்வதி.




இவர்கள் நுகர்வோர்களை கவரும் வகையில் வித்தியாசமாக யோசித்து ரயில் பெட்டி பிரியாணி என்ற பெயரில் கடை ஒன்றை திறந்து உள்ளனர். மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகில் ரயில் பயணிகளை கவரும் வகையில் இந்த பிரியாணி கடையானது ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கடையின் உள்ளே சென்று பார்த்தால் ரயிலில் உள்ள இருக்கைகள் போன்று 12 பேர் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. 


TN TRB BEO Notification: வட்டார கல்வி அலுவலர் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; அறிவிப்பின் முழு விவரம் இதோ!




மேலும், கண்கவர் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு இரண்டு பக்கமும் எல்இடி டிவி வைக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டியில் உள்ள அபாய சங்கிலி, பைகளை மாட்டுவதற்கு கொக்கி உணவு அருந்த வருபவர்கள் லக்கேஜ் வைப்பதற்கான இடம், குளிர்சாதன வசதியுடன் புதிதாக திறக்கப்பட்ட இந்த ரயில் பெட்டி பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது வருகிறது. மேலும் திறப்பு விழா சலுகையாக  ஒரு பிரியாணிக்கு ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது மூலம் புதிய கடை என்றாலும் எளிதில் மக்களுக்கு விளம்பர ஆகியுள்ளது.


Michael Battis Award: ராமநாதபுரத்தை சேர்ந்த வனவிலங்கு காப்பாளர் ஜகதீஷ் பக்கனுக்கு யுனெஸ்கோ விருது.. முதலமைச்சர் வாழ்த்து..!




மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகில் ரயிலில் பயணிகளை கவரும் விதத்தில் இந்த கடை அழைக்கப்பட்டாலும், பொதுவாகவே  கடையில் தோற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இந்த ரயில் பெட்டி பிரியாணி கடையை ஆர்வமுடன் பார்த்து உள்ளே சென்று செல்பி எடுத்து கொண்டும் பிரியாணியை ஒரு பிடி பிடித்து வீடுகளுக்கும் வாங்கிச் செல்கின்றனர்.


CM MK Stalin: கவனமாக பேசுங்கள்! அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள், திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை