பொதுக்கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகள், விழாக்களில் பேசும் தி.மு.க.-வினர் கவனமுடன் வார்த்தைகளை நிதானித்து பேச வேண்டும் என்று கட்சி  நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 


இது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் விவாதித்த பின்னர், கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர்கள் மூலமாக இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.


மக்களிடம் நமது திட்டங்களையும் சாதனைகளையும் கொண்டு சேர்க்கும் வண்ணம் பேச வேண்டும் என்றும் தேவையில்லாமல் பேசி மக்களின் அதிருப்தியை சம்பாரித்துவிட வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் விதமாக மக்களிடையே நற்பெயரை எடுத்து தர வெண்டும் என்று அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


மூத்த அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் பேசுவது சர்ச்சையான நிலையில் இது குறித்த அறிவுறுத்தலை மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சமீப காலமாக தி.மு.க. கட்சியினரிடையே பல்வேறு மோதல் நிகழ்வுகள் நடப்பதை காண முடிகிறது. திருச்சி சிவா, கே.என்.நேரு இருவர்களின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் பிரச்சனை, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ வெளியாகி சர்ச்சையானது உள்ளிட்ட நிகழ்வுகள் திமுக தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கருத்தில் கொண்டும், அதோடு மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளார்.




மேலும் வாசிக்க..


Maamannan : செட்டில் பல்ட்டி அடிச்சு சிரிப்பாங்க.. வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் குறித்து மாரி செல்வராஜ்


Vidaa Muyarchi: லண்டனிலிருந்து புது லுக்கில் வந்திருக்கும் அஜித்.. இந்த வாரமே சூட்டிங் செல்லும் விடாமுயற்சி குழு