வாகனப் போக்குவரத்து அதிகரிப்பின் காரணமாக இந்தியாவில் தினசரி பல ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நாள்தோறும் நேரிடுகிறது. இதில், ஹெல்மெட் அணியாததன் காரணமாகவே பல உயிரிழப்புகள் ஏற்படுவதாக பல புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறையைச் சேர்ந்த பைக் ரைடர்கள் இரண்டு பேர் மயிலாடுதுறையில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் வரை இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.




கேள்வி எழுப்பிய பெண்...மோசமாக நடந்து கொண்ட பாஜக எம்எல்ஏ...தொடரும் விஐபி கலாசாரம்..!


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த 30 வயதான  முத்துக்குமார், மற்றும் அவரது நண்பரான 30 வயதான வெங்கட்ராமன் ஆகிய இரண்டு பைக் ரைடர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்படாமல் தவிர்க்கவும், விபத்து ஏற்பட்டால் தங்களை காத்துக் கொள்ளும் விதமாக ஹெல்மெட் மற்றும் உடல் கவசம் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு குறித்து மயிலாடுதுறையில் இருந்து 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள லடாக் பகுதிக்கு 60 நாளில் சென்றடைய திட்டமிட்டு புறப்பட்டுள்ளனர். 




PS 1 Update: காற்றைப் போல் மென்மையானவள்...பூங்குழலி கேரக்டரை அறிமுகம் செய்த லைகா நிறுவனம்


மயிலாடுதுறையில் துவங்கி காரைக்கால் வழியாக கன்னியாகுமரி, கேரளா, கோவா, மும்பை, ராஜஸ்தான், ஜம்மு, ஸ்ரீநகர், கார்கில் வழியாக பல்வேறு மாநிலங்களை கடந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில் இவர்களது பயணம் சென்று முடிவடைகிறது. திரும்பவும் இருசக்கர வாகனத்திலேயே டெல்லி வழியாக ஆக்ரா, நாக்பூர் ஹைதராபாத் சென்னை வழியாக மயிலாடுதுறையில் வந்தடைய திட்டமிட்டு புறப்பட்டுள்ளனர். இவர்கள் இணையதளம் மூலம் ஒவ்வொரு பகுதியில் உள்ள இளைய தலைமுறைகளின் உதவியுடன் அந்தந்த பகுதிகளில் வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் மற்றும் உடல் கவசம் அணிவது அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.




Baakiyalakshmi Serial: எமனாக வந்த கரண்ட் பில்...அடித்துக் கொண்ட செழியன்- எழில்...அதிர்ச்சியில் பாக்யா


நேற்று மாலை மயிலாடுதுறையில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்க விழா நடைபெற்றது. இரு இளைஞர்களையும் மயிலாடுதுறை நகராட்சி துணைத்தலைவர் சிவக்குமார், அறம் செய்ய அறக்கட்டளையின் நிர்வாகிகள், மற்றும் ஏராளமான இளைஞர்கள் கேக் வெட்டி உற்சாகமாக வழி அனுப்பினர்.




அமிதாப் மகளாக ராஷ்மிகா பாலிவுட்டில் அறிமுகம் - "குட் பை" திரைப்படம் அக்டோபர் 7 ரிலீஸ்


இந்தியாவில் உள்ள பல பைக் ரைடர்களின் கனவுகளில் ஒன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கிற்கு, தங்களது இரு சக்கர வாகனத்தில் நீண்ட தூர சாகச  பயணம் சென்று வருவதுதான். பல பைக் ரைடர்கள் இன்றளவும் செய்து வருகின்றன. அவ்வாறு லடாக்கிற்கு செல்லும் பைக் ரைடர்களில் சற்று வித்தியாசமாக யோசித்து செல்லும் பயணத்தை மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக மாற்றும் விதமாக விழிப்புணர்வு பயணமாக மேற்கொண்டுள்ள மயிலாடுதுறையை சேர்ந்த இந்த இரு இளைஞர்களின் முயற்சியை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.