மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது.  திருமணத்தடை உள்ளவர்கள, நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

Continues below advertisement






இத்தகைய பல்வேறு சிறப்புகளையுடைய இந்த ஆலயத்தில் மாசிமக பெருவிழா  கடந்த 25 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் சுவாமி புறப்பாடு, வீதியுலா நடைபெற்றது வருகிறது. அதனைத் தொடர்ந்து 9-ஆம் திருநாள் திருவிழாவான திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு  கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் ராஜ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருள செய்யப்பட்டு கோயில் வளாகத்தை சுற்றிவந்து சிறப்பு ஹோமம் மற்றும் மகா பூரணாஹூதி செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.


Anna As Chief Minister : வெறும் பெயரல்ல; தமிழர் உணர்வு- அண்ணா முதல்வரான தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்




தொடர்ந்து மங்கல வாத்தியங்கள், சிவ கைலாய வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். பின்னர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு கோயில் செயல்அலுவலர்  நிர்மலா தேவி மற்றும் பொதுமக்கள் தேங்காய் உடைக்க வானவேடிக்கை முழங்க திருத்தேரோட்டம் தொடங்கியது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தின் போது வீடுகள்தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.  தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது மனைவியுடன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.


Lalu Prasad Yadav: லாலு பிரசாத் யாதவ் வீட்டில் ரெய்டு.. பீகாரில் அதிரடி சோதனையில் இறங்கிய சிபிஐ..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண