தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறையும், கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கமும் இணைந்து நடத்திய சோழர்கள் ஒரு மீள் புரிதல் எனும் தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.



கல்லூரியின் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் துறைத்தலைவர் முனைவர் தங்கராசு வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன் தலைமை வகித்து பேசுகையில், சோழர்களின் பூர்வீக வரலாற்றையும், பூம்புகார் நகரின் சிறப்பையும் எடுத்துரைத்து, தமிழர் பண்பாடு மற்றும் விருந்தோம்பலையும் நினைவு கூர்ந்தார்.

விழாவில் கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் கருத்தரங்கத்தின் தலைப்பை பெருமைப்பட கூறி சோழர் சிற்றரசர்களாக இருந்து பேரரசர்களாக வளர்ச்சி பெற்றவர்கள் என்றும், பழையாறை, திருப்புறம்பியம் மற்றும் உடையாளூர் பகுதிகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி அங்கு அகழ்வாய்வு செய்ய பல முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கும்பகோணம் வட்ட வரலாற்று ஆய்வு சங்கத்தின் நிறுவனர் கோபிநாத் மற்றும் தலைவர் மருத்துவர் பால.சிவகோவிந்தன் ஆகியோர் சங்கத்தின் வளர்ச்சி பற்றியும், கலை வரலாற்று செய்திகளையும் குறிப்பிட்டார். கல்லூரியின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் தெய்வநாயகம் கல்லூரியின் பாரம்பரியத்தையும், தமிழனின் தொன்மை மற்றும் பெருமையையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து மதியம் நடைபெற்ற முதல் அமர்வில் தொல்லியல் துணை கண்காணிப்பாளர் (பணி நிறைவு) முனைவர் வசந்தி, அகழாய்வுகளின் மூலம் அறியப்படும் சோழர் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். இரண்டாவது அமர்வில் சோழர் கால கோயில் கட்டடக்கலை எனும் தலைப்பில் கமாண்டர் நடராஜன் (இந்திய கப்பல் படை) உரையாற்றினார். நிகழ்ச்சிகளை முனைவர் சுதா தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர் முனைவர் மணிவண்ணன் நன்றியுரை கூறினார்.

கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்


கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கோவிலாச்சேரி ஊராட்சியில் உள்ள களம்பரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 10 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 112 மகளிர்களுக்கு, ரூபாய் 5 லட்சத்து 80 ஆயிரத்திற்கு கடன் தள்ளுபடி பெற்றதற்கான சான்றிதழ்களை, கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் வழங்கினார்.




ஒன்றிய திமுக செயலாளர்கள் கணேசன், சுதாகர், ஒன்றிய துணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், நேரு, ஜெயந்தி தேவேந்திரன், பொருளாளர் பவுன்ராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மார்க்கெட் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ், கந்தசாமி, இஸ்ரேல், உதயம் கோவிந்தராஜன், சோழபுரம் பேரூர் திமுக செயலாளர் ஜெபுருதீன், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகன், களம்பரம் தொடங்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் இராமலிங்கம், துணைத்தலைவர் ரவி, தேவனாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பிரவின்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயசீலா அறிவழகன், சங்கர், துணைத்தலைவர் செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் செல்வமணி, ராமலிங்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.