மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பேச்சாவடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வேன்கள் பேச்சாவடி அருணா நகர் பகுதியில் சென்று வருகின்றன. வானங்கள் அதிகம் செல்வதை அடுத்து இந்த பகுதியில் சாலையை புதிதாக போடுவதற்காக கப்பி சாலை அமைத்து அதன் மேல் செம்மண்ணை கொட்டியுள்ளனர்.




ஆனால் செம்மண் கொட்டி ஆறு மாதம் கடந்த நிலையில் இன்னும் அதன் மீது தார்சாலை போடவில்லை. இதன் காரணமாக தனியார் பள்ளி வாகனங்கள் செல்லும் பொழுது புழுதி பறந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் படித்து அதன் மூலம் பல்வேறு இன்னல்களை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சேறும், சகதியமாக மாறிவிடுவதால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள்  வாகனத்துடன் வழுக்கி கீழே விழும் நிலைமையும் உள்ளது. 


Gemini Bridge: சென்னையின் முக்கிய அடையாளம்... இன்றுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ஜெமினி ப்ரிட்ஜ்.. சுவாரஸ்யங்கள் இதோ..




கடந்த மழைக்காலத்திலேயே இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இருந்தும் இதுநாள் வரை சாலை முழுமை அடையாமல் இருந்து வருகிறது.  இந்த சூழலில் பள்ளி வாகனங்கள் செல்வதால் குடியிருப்பு பகுதியில் புழுதி பறப்பதால் பள்ளி வாகனங்களை மாற்று வழியில் செல்ல வேண்டும் என்று கூறியும், சாலையை உடனடியாக தார் சாலையாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் முட்களை போட்டும், கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான வாகன நெரிசல் ஏற்பட்டு மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.


Governor RN Ravi : சனாதன தர்மம் உருவாக காரணமாக இருந்தது தமிழ்நாடு.. ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து..




இதனால் பள்ளி வாகனங்களும் செல்ல முடியாமல் வரிசை கட்டி நின்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு. விரைவில் தார்சாலையாக மாற்றுவதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்