மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் 38 வயதான கலைவாணன். இவருக்கும் 29 வயதான கீர்த்திகா என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் பணியாற்றி வந்த கலைவாணன் கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்த கலைவாணன்  தன் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்கு கணக்குகளை கேட்டு உள்ளார். 




அப்போது கீர்த்திகா கணவன் அனுப்பிய பணத்தை தனது தந்தை வீட்டிற்கும், கணவரின் உறவினர்களுக்கும் கொடுத்து ஊதாரித்தனமாக செலவு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் கலைவாணன் கடந்த சில நாட்களாக  மனைவி கீர்த்தி காவியத்திடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த சூழலில் இன்று காலை கலைவாணன் தனது மனைவி கீர்த்திகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.


Mamannan Box Office : சமூக நீதி பேசும் மாமன்னன்.. இரண்டு நாளில் குவித்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?




இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கலைவாணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் கணவர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள  https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண