மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 -ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது, ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரவை தந்தது. 1993 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இந்நிலையில் 1994 -ஆம் ஆண்டு 33 கோடி ரூபாயில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. 




விரிவாக்கம்  பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், ஒரு டன்னுக்கு  59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், நஷ்டத்தை சந்தித்து வந்த  ஆலையை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2015 -ம் ஆண்டில் 56 கோடி ரூபாய் நிதி ஆலை புனரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆலையை புனரமைப்பதற்கான நிதியை தமிழக அரசு வழங்கவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் 2017 -ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர். சக்கரை ஆலையை திறக்க கோரி பல்வேறு தொடர் போராட்டங்களை கரும்பு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தினர்.  




இந்நிலையில் மயிலாடுதுறை  ஆலை விரிவாக்கம் பணிகளை  தனியார் நிறுவனம் ஒன்று செய்துள்ளது.  இந்த விரிவாக்க பணிகள் முறையாக செய்யாததால் 3500 டன் முழு கொள்ளளவு அரைக்க இயலாமல் ஆலை நஸ்டத்தில் இயங்கியது. இந்த நஸ்டத்திற்கான 2 கோடி ரூபாயை பாக்கியை தனியார் நிறுவனத்திற்கு ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் தனியார் நிர்வாகம் வழக்கு தொடுத்து, நிலுவைத் தொகை அபராதத்துடன் சுமார் ரூபாய் ஆறு கோடி பெறுவதற்கான உத்தரவை பெற்றதாககவும் கூறப்படுகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மூலம் தனியார் நிறுவனத்தினர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்று மனு அளித்தனர். இதனஐ தொடர்ந்து  என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இடங்களை கையகப்படுத்த 38 சர்வே இடங்களில்  ஆய்வு செய்து அதன் மதிப்பை அறிவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


TN Governor Case: ”ஆளுநர் ரவி முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமர்ந்து பேச வேண்டும்” - தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி




அதன் அடிப்படையில் மயிலாடுதுறை நீதிமன்ற ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், நிலஅளவை துறையினர் காவல்துறையினர் பாதுகாப்படன் ஆலையின் கட்டிடம் மற்றும் சில பகுதிகளின் மதிப்பீடு பணியை கடந்த 28 -ம் தேதி துவங்கினர்.  இதற்கு கரும்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இரண்டாவது முறையாக இன்று மதிப்பீடு செய்ய வந்த நீதிமன்ற உத்தரவு கட்டளை ஊழியர்களை ஆலையின் உள்ளே செல்ல விடாமல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் கோஷங்களை எழுப்பி தடுத்து நிறுத்தி கண்டன முழக்கமிட்டனர். தமிழக அரசு சர்க்கரை ஆலையை  இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மதீப்பீடு செய்யாமல் நீதீமன்ற ஊழியர்கள் திரும்பி சென்றனர்.இந்நிலையில்  ஆலையை சீரமைத்து  மீண்டும் இயக்க தமிழக அரசு சமீபத்தில் குழு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது