தஞ்சாவூர்: திருவண்ணாமலை செய்யாறு சிப்காட் விவகாரத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் திட்டவட்டமாக தெரிவித்தார். ஒருங்கிணைந்த நிலப்பறிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். செய்யாறு மூன்றாம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். உழவர்களிடமிருந்து பல்வேறு வடிவங்களில் பறித்த நிலங்கள் அனைத்தையும் அவர்களுக்கே திருப்பி கொடுக்க வேண்டும். திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை விலக்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் - மணியரசன்
என்.நாகராஜன் | 01 Dec 2023 02:04 PM (IST)
விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளை நீக்கி அவர்களிடம் பறித்த நிலங்கள் அனைத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும்.
காவிரி உரிமை மீட்பு குழு
Published at: 01 Dec 2023 02:04 PM (IST)