மனித இனம் உருவாகும்போதே தமிழ் சமூகமும் தமிழ் இலக்கியமும் தோன்றியுள்ளதற்கான பல ஆய்வு ஆதார நிலைகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே உள்ளன. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் ஆகியோர் அமைப்பு ரீதியாக சென்ற நூற்றாண்டில்தான் இணைந்து செயல்பட தொடங்கினார்கள். அப்படி தமிழ் இலக்கியவாதிகளை, எழுத்தாளுமைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். ‘இலக்கிய பேராசான்’ என்றழைக்கப்பட்ட பொதுவுடமை இயக்க தலைவர் ப. ஜீவானந்தம் தலைமையில் இந்த அமைப்பு 1961இல் உருவாக்கப்பட்டது.
மறைந்த பாலதண்டாயுதம், ஜெயகாந்தன், கே.சி.எஸ். அருணாச்சலம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், குன்றக்குடி அடிகளார், தா. பாண்டியன், தொ.மு.சி. ரகுநாதன், தனுஷ்கோடி ராமசாமி, வாய்மைநாதன், தத்துவ ஆய்வாளர் வானமாமலை, தி.க.சி, நாட்டுப்புறக் கலைஞர் கே.ஏ. குணசேகரன், கைலாசமூர்த்தி, ஹைகூ கவிஞர் ரசூல் என நூற்றுக்கணக்கான இலக்கிய ஜாம்பவான்கள் இயங்கிய அமைப்பு, தற்போதும் நாவலாசிரியர் பொன்னீலன் உட்பட பல இலக்கிய தலைமை பண்பு கொண்டவர்களால் இயங்கும் அமைப்பு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம். தற்போது அதன் 62 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
Martin Scorsese: 80 வயதிலும் படம் இயக்கி அசத்தும் மார்ட்டின் ஸ்கார்சீஸ்.. யார் இந்த சினிமா காதலர்..?
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மக்கள் கலை விழா 2023 நடைபெற்றது. முன்னதாக பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் விழிப்புணர்வு பேரணி தமிழிசை மூவர் மணிமண்டபம் வாசலில் இருந்து துவங்கியது. பேரணியை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார். பேரணியானது சீர்காழி நகரின் முக்கிய வீதியின் வழியாக வலம் வந்தது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பார்க்கும் விதமாக பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், வாழ் வீழ்ச்சி, கரகாட்டம், உள்ளிட்ட பல்வேறு கலைகளை சாலைகளில் மாணவர்கள் செய்தவாரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, அதனை தொடர்ந்து சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் கலை இலக்கிய மன்றத்தின் பட்டிமன்றம் நடைபெற்றது.
Actress Navya Nair: நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி.. பதறிய ரசிகர்கள்.. என்ன நடந்தது?
இதில் கலைகளை மீட்டெடுக்கும் வகையில் அதில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர், மேடையில் பாரம்பரிய கிராமிய பாடல்கள் பாடியும், சிலம்பாட்டம், வாள்வீழ்ச்சி, கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை காண சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு மகிழ்ந்தனர். விழாவினை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சீர்காழி கிளை சார்பாக பிரபாகரன், அலெக்சிஸ் நிக்கோலஸ், ரஞ்சித்குமார், அமீர்தீன் உள்ளிட்ட பல சிறப்பாக செய்திருந்தனர்.
WhatsApp Feature: இனி வாட்ஸ் அப் ஸ்கிரீனை யாருக்கு வேனும்னாலும் ஷேர் பண்ணலாம்...! எப்படி தெரியுமா..?