அரசு மதுபானத்தில் சையனட் கலந்திருப்பது போன்று இதற்கு முன்பு எங்கேயாவது நடந்திருக்கிறதா? என்று திருவாரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


தமிழகத்தில் ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ளதற்கும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு அதிகரித்துள்ளதற்கும் கொலை கொள்ளை வழிப்பறி போதைப் பொருள்கள் பழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றிற்கு காரணமாக திமுக அரசு இருப்பதாகவும் கூறி அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதன் அடிப்படையில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும் கொலை கொள்ளை வழிப்பறி போன்றவற்றை தடுத்து சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



 

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை காரணமாக 25 உயிர்கள் போயிருக்கிறது.தஞ்சாவூரில் இரண்டு அன்புக்குரிய சகோதரர்கள் மீன் வியாபாரம் செய்யக்கூடியவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் 12 மணிக்கு திறக்க வேண்டிய கடை பத்தரை மணிக்கு திறந்திருக்கிறது. அதில் பிராந்தி வாங்கி முடித்துவிட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் குடித்த மதுவில் சையனட் கலந்திருப்பதாக கலெக்டர் கூறுகிறார்.இதுபோன்று எங்கேயாவது  இதுவரை நடந்திருக்கிறதா கள்ளச்சாரய விற்பனையால் 25 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பேசினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் முன்னாள் மன்னார்குடி நகர மன்ற தலைவர் சிவராஜ மாணிக்கம் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் மணிகண்டன் கலியபெருமாள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண