நாளுக்கு நாள் சீர் கெட்டுப் போகும் சீர்காழி நகராட்சியால் சீர்காழி நகராட்சி சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளது. இந்த இரண்டு நகராட்சிகளிலும் நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்தவர்கள் பதவி வகுத்து வருகின்றனர். இந்த சூழலில் சீர்காழி நகராட்சி நாளுக்கு நாள் மிகவும் சீர் கெட்டு வருவதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றன.




இது குறித்து சீர்காழி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் ஏன்டா காரணத்தினால் நகராட்சி நிர்வாகம் ஆணையரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அரசு அலுவலரான ஆணையர் இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை முறையாக பூர்த்தி செய்து வந்தார்கள். ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற தலைவர் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒவ்வொரு பணிகளும் நடைபெறும் சூழல் நிலவுவதால்,




தற்போது எந்த ஒரு அடிப்படை தேவையும் சீர்காழியில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரு மின்விளக்கு பிரச்சனை, குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, எல்லாவற்றுக்கும் மேலாக தூய்மைப் பணியான குப்பைகள் அள்ளும் பணியும் சரிவர நடைபெறாமல் பல இடங்களில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. இதுவரைக்கு நகர மன்ற கூட்டத்தில் ஒரு சில நகர வார்டு உறுப்பினர்கள் குரல் எழுப்பினாலும் அதற்கு நகர மன்ற தலைவர் செவி சாயிப்பதாக தெரியவில்லை.




மேலும் ஒவ்வொரு நகர மன்ற கூட்டத்திலும் சீர்காழி நகராட்சி குறித்து பல்வேறு பிரச்சனைகளை உறுப்பினர்கள் வெளிக்கொண்டு வருவதால், பிரச்சினைகள் மக்களுக்கு  தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக நகர மன்ற கூட்டத்திற்கு செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்காமல் ரகசியமாக கூட்டங்களை ஏற்பாடு செய்வதாகவும் ஒரு சில உறுப்பினர்கள் நகர மன்ற தலைவர் மீதும் ஆணையர் மீதும் புகார்களை தெரிவிக்கின்றன.


Sruthi Shanmuga Priya: எங்க குடும்பம் உடைஞ்சு போயிருக்கு.. தயவுசெஞ்சு இப்டில்லாம் பண்ணாதீங்க.. ஸ்ருதி இன்ஸ்டா பதிவு




இந்நிலையில் சீர்காழி நகராட்சி எல்லையை குறிக்கும்  எல்லை பலகையை கூற முறையாக பராமரிக்காமல், பல ஆயிரம் ரூபாய் செலவில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆன சீர்காழி நகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என வைக்கப்பட்ட பலகை தற்போது பிடுங்கி எறியப்பட்டு குப்பை தொட்டியில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இதனை காணும் சீர்காழி நகராட்சிக்குள் புதியதாக வரும் வேலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த பலகையை கூட சரி செய்ய முடியாத இப்படியும் ஒரு நகராட்சி நிர்வாகமா? என கேள்வி எழுப்பியவாறு செல்கின்றனர். மேலும் கடந்த வாரம் தெரு விளக்கு எரியவில்லை என பொதுமக்கள் இரவில் தீப்பந்தம் ஏற்றிய சம்பவம், தரைகடை சிறு வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிக்கு லட்சம் வாங்கிய புகார்களும், தொடர்ந்து சரிவர குப்பைகள் அள்ளப்படாமல் உள்ள என பொதுமக்கள் பிரச்சினை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.