எல்லா யூடியூப் சேனல்கள், செய்தி சேனல்கள் ஊடகங்களுக்கு அன்பான வேண்டுகோள். தயவு செய்து வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள், எங்களை மேலும் காயப்படுத்தாதீர்கள்.


சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் நேற்று  மாரடைப்பால் உயிரிழந்தார்.


30 வயதில் அரவிந்த சேகரின் இந்த திடீர் மரணம் சின்னத்திரை வட்டாரத்தை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஸ்ருதி யூட்யூப் சானல்கள், ஊடகங்களுக்கு கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


“அரவிந்தோட இறப்புக்கு நிறைய பேர் நேர்ல வந்தும் ஃபோன்ல மெசேஜ் பண்ணியும் விசாரிச்சிங்க, எங்களுக்கு நிறைய பலம் கொடுத்தீங்க. அரவிந்த என்கூடவே இருக்காரு, அவர் என்ன விட்டு போக மாட்டாரு.


இந்த மாதிரி நேரத்துல இப்படி வீடியோ ரெக்கார்ட் போடுவதற்கான காரணம், நிறைய யூடியூப் சேனல்கள் நிறைய தேவையில்லாத தகவல்கள பரப்பிட்டு இருக்கீங்க, உங்களுக்கு தகவல் தேவைப்பட்டா நான் பேசறத எடுத்து போட்டுக்கோங்க.. தெரியாத தகவல பரப்பாதீங்க. என் குடும்பத்தினர் இதனால ரொம்ப் மன உளைச்சலுக்கு ஆளாகறாங்க.


எல்லா யூட்யூப் சேனல்கள், ஊடகங்களுக்கும் கேட்டுக்கறேன், மாரடைப்பு, இறந்துட்டாரு. அதத் தாண்டி ஜிம் ட்ரெய்னர், பாடி பில்டர், ஜிம்ல ஒர்க் அவுட் பண்ணும்போது இறந்துட்டாரு அது இதுனு எழுதாதீங்க. அவர் சிவில் இஞ்சினியர். உடலை கட்டுக்கோப்பாக பேணுவதில் ஆர்வம் கொண்டவர், அவ்வளவுதான். நாங்கள் அவர் இறப்ப தாண்டி அடுத்த விஷயங்கள செஞ்சிட்டு இருக்கோம். யூட்யூப் சேனல்கள் இந்த மாதிரியான விஷயங்கள் பரப்ப வேண்டாம். இது தான் என் கோரிக்கை. வீட்டில் எல்லரும் வயசானவங்க.. நாங்க தான் குடும்ப உறுப்பினர்கள தாங்கிட்டு இருக்கோம்.


 






நீங்க பகிரும் தேவையற்ற போலித் தகவல்கள் நிச்சயமாக எங்களை அழித்துவிடும். இது எங்களுக்கு அதிக வேதனையையும் தருது” என ஸ்ருதி பதிவிட்டுள்ளார்.


ஸ்ருதிக்கும் அரவிந்த் சேகருக்கும் கடந்த மே மாதம் திருமணமான நிலையில், திருமணமாகி அடுத்த ஆண்டே அரவிந்த உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கு அவரது ரசிகர்களும் சின்னத்திரை வட்டாரத்தினரும் தொடர்ந்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக ஸ்ருதி தன் கணவருடன் புகைப்படங்கள்,  வீடியோக்கள் பகிர்ந்து வந்த நிலையில், அரவிந்தின் திடீர் மரணம் இணையவாசிகளையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது