திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஆலங்குடி ஊராட்சிக்குட்பட்ட குளக்குடி கிராமத்தில் 65 க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த சுமார் 250 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கடந்த 2001-2002 ஆம் நிதியாண்டில் கட்டப்பட்டு கடந்த 2012-2013ஆம் ஆண்டு 23,000 ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்பொழுது பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு காணப்படுவதால் அதிலிருந்து தண்ணீர் கசிவதுடன் மாதம் தோறும் உரிய முறையில் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் தவளை எறும்பு பூரான் போன்றவை உள்ளதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் குழாயில் தண்ணீர் பிடிக்க திறந்த போது அதில் பூரான் வந்துள்ளது. இதேபோன்று கடந்த வாரம் எறும்புகள் குழாய் தண்ணீரில் வந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நீர் தேக்க தொட்டியின் உள்ளேயும் வெளியேயும் சிமெண்ட காரை பெயர்ந்து காணப்படுகிறது. நீர் தேக்க தொட்டியின் பில்லரிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் குடிநீர் குழாயில் பூரான் வந்து விழுந்த வீடியோ சமூக வலைதலங்களில் பதிவிடப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும் முறையிடப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உரிய முறையில் பராமரிக்கப்படாத காரணத்தினால் குழந்தைகளுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்,கு வாந்தி போன்றவை அடிக்கடி ஏற்படுவதாகும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டியை கட்டித் தருவதுடன் அதை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்