தமிழகத்தில் கடைசி 38வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம். இந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை சீர்காழி என இரண்டு நகராட்சிகளை கொண்டுள்ளது. சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகளை உள்ளடக்கியதாகும். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற வார்டு வாரியாக வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணிகள் ஆற்றி வரும் நிலையில், சீர்காழி நகராட்சி நகர மன்ற தலைவர் பொதுமக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர்.




அதற்கு உதாரணமாக பல இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் சுகாதார சீர்கேடு சீர்காழி நகராட்சியில் நிலவி வருவதும், பல வார்டுகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட பல பிரச்சனைகள் நகராட்சியில் இருந்து வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை பதிவு செய்கின்றனர்.


Annamalai Pressmeet: திமுக கோப்புகள் 2: ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட வீடியோ: அண்ணாமலை சொல்வது என்ன?





இந்த சூழலில் தெரு விளக்கு இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்த சீர்காழி நகராட்சி 10 வது வார்டுக்கு உட்பட்ட திருக்கோலக்கா தெரு, திரௌபதி அம்மன் கோயில், பிடாரி அம்மன் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் பலமுறை  இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், தெரு விளக்கு எரிய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இரவு முழுவதும் சாலைகள் இருண்டு கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும்  மக்கள் பெரும் அவதியடைகின்றனர். 




இரவு நேரங்களில் பள்ளி மற்றும் டியூஷன் சென்று விட்டு வீடுகளுக்கு திரும்பும் மாணவ, மாணவிகள், பணிகள் முடிந்து வீடு  திரும்பும் பொதுமக்கள் இருண்டு  கிடக்கும் சாலையில் நடந்து செல்வதற்கு அச்சமாக உள்ளதென்றும், சாலையில் நண்டுவாக்கிலி , பாம்பு உள்ளிட்ட  விஷ ஷந்துக்கள் செல்வதாகவும், இருட்டில் நடந்து செல்லும் போது அவை கடித்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறும் மக்கள், இருட்டில் வீடுகளில் விஷ ஜந்துக்கள் புகுந்து விடுவதாகவும் கூறினர். சாலையில் எதிரே வருவது தெரியாமல் இருட்டில் நடந்து செல்பவர்கள் மீது சைக்கிளில் செல்பவர்கள்  மோதி  கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.


MLC 2023: எம்.எல்.சி கிரிக்கெட் தொடர்: தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள்... அசத்திய வீரர்களின் பட்டியல் இதோ!




இதனால் அச்சம் அடைந்த மக்கள்  இரவு தீப்பந்தங்களை கொளுத்தி மின் கம்பத்தில் கட்டியும் மெழுகுவர்த்தியை ஏத்தி வைத்தும் சாலைகளில் செல்கின்றனர். இவ்வாறு எத்தனை நாட்கள் தீப்பந்தம் கட்டி  இரவு பொழுதை கடத்த முடியும் என கேள்வி எழுப்பிய பொதுமக்கள்,  நகராட்சி நிர்வாகம் தெரு மின் விளக்குகள்  சரிவர எரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.