மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி வைத்தீஸ்வரன் கோயில் துணை மின் நிலையத்தில் இருந்து 33 கிலோ வாட் செல்லும் 13 கிலோ மீட்டர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்களம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேரத்தில் மாறுதலுக்கு உட்படும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.