மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் வழியே பிரதான பாசன ஆறான கழுமலையான் ஆறு உள்ளது. கொண்டல் பகுதியில் பிரியும் கழுமலையான் ஆறு மூலம் அகணி, கோயில்பத்து, சீர்காழி, தாடாளன் கோயில், திட்டை, தில்லைவிடங்கன், சிவனார்விளாகம், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்பகுதிகளில் வாய்க்கால் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. வாய்க்காலின் மேற்கு பகுதி, கிழக்கு பகுதி தூர்வாரும் பணி நடைபெற்ற நிலையில், இடையே உள்ள சீர்காழி நகர் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் தூர்வார முடியாமல் ஆறு முழுவதும் கழிவுநீர் நிரம்பி இருந்ததால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரும் பணியினை நிறுத்தினர். மேலும், கழுமலையான் ஆறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் நகர் பகுதி ஆக்கிரமைப்புகளை அகற்றி கழிவுநீர் கலப்பதை தடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரி தரவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
Tomato price: சேலம் மாநகரில் 15 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்
இதனால் குடியிருப்பு வாசிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சூழல் நிலையில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை சீர்காழி வட்டாட்சியர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் கழிவுநீர் கலப்பதால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் வருதில்லை எனவும், பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதால் கழிவு நீர் கழுமலையான் ஆற்றில் கலப்பதை சீர்காழி நகராட்சி தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும், கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கூறி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து விவசாயிகள் பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.