தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்துடன் வடகிழக்குப் பருவமழை முடிவுற்ற நிலையில், மார்ச் மாதம் முடிய பனிகாலம் ஆகும். இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக கோடை காலம் போன்று வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Local Body Election | விதிகளை மீறி இரவில் கூட்டம் - பறக்கும் படையால் நடையை கட்டிய காங்கிரஸ் தலைவர்கள்


இதனை சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி திடீர் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோயில், மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, கொள்ளிடம், திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை லேசான மழையாக தொடங்கி தற்போது பலத்த மழையாக பெய்து வருகிறது. காலை 8 மணிக்கு பின்னரே பலத்த மழை தொடங்கியதால் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. சில இடங்களில் சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், பலத்த மழை தொடர்ந்தால் பயிர்கள் சாய்ந்து விடும் அபாயம் உள்ளது.



 


Crime | கோமியம் குடிக்க சொல்லி டார்ச்சர்... பெண் மருத்துவர் தற்கொலை - மாமியார், கணவருக்கு 7 ஆண்டு சிறை உறுதி


இதேபோல பல்வேறு இடங்களில் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல்மணிகளை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர். இந்த விவசாயிகளுக்கு  மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு மணிநேரத்தை கடந்து பெய்து வரும் இந்த மழை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சம்பா சாகுபடி செய்து பயிர்கள் முளைத்து வரும் பருவத்தில் பெய்த கன மழையில் தப்பி மீண்டும் கதிர் விடும் தருவாயில் பல இடங்களில் பயிர்கள் மழையில் மூழ்கிய நிலையில் தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது பெய்துவரும் இந்த மழை விவசாயிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என வேதனை தெரிவித்துள்ளனர்


Tamil news | தூத்தூக்குடியில் பிடிபட்ட ரேஷன் பொருட்கள்... மதுரையில் புதிய ரக கத்தரி - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்