1. தூத்துக்குடியில் 2 இடங்களில் பதுக்கி வைத்து கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. தூத்துக்குடியில் கொலை, போக்சோ உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
3. நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நெல்லையில் இன்று நடைபெற்றது.
4. ஐந்து மாநிலத் தேர்தலுக்காகவே கர்நாடக ஹிஜாப் பிரச்சனையை பாஜக கையில் எடுத்துள்ளது. 5 மாநில தேர்தலுக்கு முந்தய கருத்து கணிப்பை நம்பவில்லை மக்களை நம்பியே காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கிறது என நெல்லையில் கேரள முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
5. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி வாக்குகள் எண்ணப்படும் வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரியை தேர்தல் பார்வையாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
6. மதுரை வேளாண்மை கல்லூரி தோட்டக்கலை துறை சார்பில் எம்.டி.யு 2 என்ற புதிய ரக கத்திரிக்காய் வெளியிடப்பட்டுள்ளது.
7. ராமநாதபுரத்தில் ஐம்பொன் சிலைகள் பதுக்கி கடத்தல் வழக்கில் வியாபாரி ராஜேஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
8. தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் 182.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அபகரிப்பு வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆர்.டி.ஓ ஆனந்தியிடம் தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
9. "நீட் தேர்வால் தமிழகத்தில் முன்பை விட தற்போது அதிக மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருகின்றனர்" - நகைச்சுவை நடிகர் செந்தில் மதுரையில் பி.ஜே.பி பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
10. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூர் இளங்காமுடி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Local Body Election | எங்களுக்கு முருகனும் அல்லாவும் இயேசுவும் வேண்டும்; மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் நாங்கள் இல்லை - அண்ணாமலை