நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சையில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பேசுகையில், அனைவரும் தடுப்பு ஊசி போட்டுள்ளீர்களா, எத்தனை ஊசி போட்டுள்ளீர்கள். இரண்டு போட்டு விட்டீர்களா, உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். ஆனால் உங்களை பார்த்த பிறகு வாக்கு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே வாக்கு அளித்து விடுவீர்கள். கடந்த மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்று கொண்டது. அப்போது கொரோனா இரண்டாவது அலை. தமிழகத்தில் மிகவும் மோசமான நிலை இருந்தது. கடந்த கால ஆட்சியில் ஆஸ்பித்திரி இல்லை, ஆஸ்பித்திரி இருந்தால் பெட் இல்லை. முக.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று, அவரது ஆலோசனையின் படி பணியாற்றி கொரோனா இரண்டாவது அலை வென்றோம்.  அதிமுக ஆட்சியில் ஒரு வருடத்தில் 1 கோடி தடுப்பூசி போட்டிருந்தார்கள். திமுக ஆட்சி ஏற்ற பிறகு 8 மாதத்தில் 10 கோடி தடுப்பூசி போட்டுள்ளோம். அதனால் தான் மூன்றாவது அலையிலிருந்து தப்பித்துள்ளோம். இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்குள் சென்ற ஒரே முதல்வர், நம் முதல்வர் தான்.  இந்தியாவிலேயே நம்பர் 1 சிஎம் நம் தமிழக சிஎம் தான்.




ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதம் கொரோனாவால் போய் விட்டது. அதன் பிறகு மழை வெள்ளத்தால் ஒரு மாதம் போனது. இதுக்கெல்லாம் நடுவில்,, இன்னும் 5 வருடம் இருக்கின்றது. இப்போது 8 மாதம் ஆகின்றது. திமுக அறிக்கையில் அறிவித்த படி கொரோனா நிவாரண தொகையாக ரூ. 4 ஆயிரம் இரண்டு தவணையாகவும், ஆனால் அதிமுகவின் கண்டிப்பாக தரமுடியாது என்று சொன்னார்கள். மகளிருக்கு இலவச பஸ் வசதி, பெட்ரோல் விலையில் ரூ. 3 குறைத்தார். ஆவின் பால் விலையை குறைத்தார், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 50 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்.  இல்லம் தேடி கல்வி, நம்மை காக்கும் 48 திட்டம், ஒரு  லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி, கூட்டுறவுத்துறை கடன்களை வாங்கியிருந்தால், தள்ளுபடி,  அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பொறியியல் இடஒதுக்கீடு இது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை 8 மாத்தில் முதல்வர் நிறைவேற்றி வருகின்றார்.  


அனைத்து உறுதி மொழிகளையும் அடுத்த அடுத்த நாட்களில் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என பேசி கொண்டிருந்த போது, திமுகவை சேர்ந்த பெண் ஒருவர், வங்கியில் நகைக்கடனை தள்ளுபடி செய்ய வில்லை என்றார். அதற்கு உதயநிதி ஸ்டாலின்,  விரைவில் கொடுத்து விடுவார்கள்,  இப்போது ஆட்சிக்கு வந்து 8 மாதம் ஆகின்றது. நீ்ங்கள் எத்தனை வங்கியில் வாங்கியுள்ளீர்கள், ஒரே வங்கியிலா, யார் யார் பெயரில் வாங்கியுள்ளீர்கள்,  அதற்கான ஆவணங்கள் இருந்தால் கொடுங்கள் என்றார். அப்பெண் இல்லை என்று கூறினார். அதற்கு உதயநிதிஸ்டாலின், குறை சொல்ல தெரிகிறது, ஆவணங்களை எடுத்து வந்து என்னிடம் கொடுத்திருக்கலாமுல்ல, அப்போது அப்பெண் ஏதோ கூற, உனது பெயர் என்ன என்றார். அப்பெண் தங்கம் என்றார். தங்கமே கடன் வாங்குது.




ராகுல்காந்தி, பிரதமர் மோடியை பார்த்து, திமுக இருக்கும் வரை பாஜக கால் வைத்து கூட படுக்க முடியாது என்றார். அந்தளவிற்கு பாசிச பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் சிம்ம சொப்பனமாக திமுக திகழ்ந்து வருகின்றது.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, என்னை காணவில்லை என்கிறார். என் மேல் என்ன பாசம் பார்த்தீர்களா, அவர் என்னையே தேடி வருகின்றார். எம்எல்ஏ தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தார், அதன் பிறு காணாமல் போய் விட்டார் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.நான் பொது மக்களுடன் தான் இருக்கின்றேன். திமுகவின் சாதனைகளை சொல்லி தைரியத்துடன் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். அப்போது குறுக்கீட்டு மற்றொரு பெண் கேள்வி கேட்டார், அதற்கு உதயநிதி ஸ்டாலின் கடைசி வரை என்னை பேச விடமாட்டீர்கள் என்றார்.




அந்த பெண்ணிடம் எந்த ஊர் என்றார். அதற்கு அப்பெண் திருக்குவளை என்றார். இது கலைஞர் பிறந்த ஊர், பள்ளி கட்டணம் அதிகமாக கேட்கின்றார்கள் என அப்பெண் கூறினார். எந்த பள்ளி, என மனு எழுதி கொடுங்கள் கண்டிப்பாக செய்து கொடுப்பார்கள். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின், எங்கப்பா சட்டமன்ற உறுப்பினர் எங்கே எனவும், எங்கே அவர் என அழைத்தார். அதன் பிறகு எம்எல்ஏ வராததால், குறைகளை இப்போதே எழுதி கொடுங்கள் என்றார். நீங்கள் இவ்வளவு தைரியாமாக வேறு யார்கிட்டேயும் பேச முடியுமா, என கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். திமுகவை சேர்ந்த பெண்களே கேள்வி மேல் கேள்வி கேட்டதால், பேச்சை முடித்து விட்டு புறப்பட்டார். என்றார்.



அதன் பின்னர், கேள்வி கேட்ட பெண்ணான கவிதா கூறுகையில், எனக்கு மூன்று பேத்திகள், மகள் இறந்து விட்டார். மூன்று பெண் குழந்தைகளை வைத்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றேன் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது, அரசு பள்ளியில் பணியாற்றும் ஒருவர், அப்பெண்ணை, நிருபர்களிடம் பேச விடாமல் விரட்டியடித்தார். அப்பெண், செய்வதறியாது அங்கும் இங்கும் அலைந்த போது, மற்ற திமுகவினரும் அப்பெண்ணை திட்டினர். பிறகு அருகிலுள்ள கடைக்குள் அழைத்து சென்று மறைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.