மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கப்பூர் ஊராட்சியில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அதிக வெறிநாய்கள் சுற்றி திரிவதாகவும், அந்த வெறிநாய்கள் அப்பகுதி  மக்களின்  வாழ்வாதாரமான 200க்கும் மேற்பட்ட ஆடுகளையும்,  50க்கும் அதிகமான மாடுகளை கடித்து விட்டதாகவும், இதில் பெரும்பாலான ஆடு, மாடுகள் உயிரிழந்து உள்ளதாகவும், மேலும் பொதுமக்கள், குழந்தைகளை சாலையில் செல்வோரை இரவு நேரங்களில் துரத்துவதாகவும் இதனால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.




இந்நிலையில் நாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை  எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், துணைத் தலைவர் மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம்  மனு அளித்தனர். அந்த மனுவில்  தங்கள் பகுதியில் அதிக அளவில் கால்நடை வளர்ப்புகள் ஆடுகள் மாடுகள் அதிகம் உள்ளதாகவும், தெருக்களில் சுற்றித் திரியும் வெறி நாய்கள், தெரு நாய்களுடன் சேர்ந்து ஆடுகளையும், மாடுகளையும் கடித்து குதறி கொன்று விடுகிறது.


TNPSC Chairman: டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்; ஆளுநர் கேள்விகளுக்கு விரைவில் பதில்: தமிழ்நாடு அரசு தகவல்




இதனால் நாங்கள் நாள்தோறும் அச்சத்தில் உள்ளோம். உடனே எங்கள் பகுதியில் உள்ள மனிதர்களுக்கும், குழந்தைகளுக்கும் வெறி நாய்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு அதனை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர். இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.