மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் அமைந்துள்ளது பெரம்பூர் கிராமம்.  விவசாயம் நிறைந்த இக்கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலமரம் ஒன்றில் ஆயிரகணக்கான வெளவால்கள் வாழ்ந்து வருகின்றன. கிராமத்தின் நடுவே வயல்வெளியில் அமைந்துள்ள ஆலமரத்தில் வெளவால்கள் வசிப்பதால் இப்பகுதியை வெளவாளடி எனவும் அழைக்கின்றனர். இந்த வெளவால்கள் வசிக்கும் பகுதிக்கு கிராம மக்கள் அனுமதியின்றி வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாது. 




வெளவால்களை பாதுகாக்க இளைஞர்கள் கொண்ட வேட்டை தடுப்பு குழு ஒன்றை அமைத்து யாரும் வெளவால்களை இறைச்சிக்காவும், இன்பிற தேவைகளுக்காக வேட்டை ஆடாத வகையில் மூன்று தலைமுறைகளாக வெளவால்களை பெரம்பூர் கிராமமக்கள் பாதுகாத்து வருகிறனர். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் தீபாவளி அன்று வெடிவெடித்து கொண்டாட கூடிய நிலையில் இங்கு மட்டும் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதையும் தடை செய்துள்ளனர். தீபாவளி மட்டும் இல்லாமல் இந்த ஊரில் திருவிழா, இறப்பு உள்ளிட்ட துக்க நிகழ்வு என ஆண்டின் 365 நாட்களும் பட்டாசு வெடிப்பதில்லை.




பட்டாசு சத்ததால் வெளவால்கள் அச்சமடையும் என்பதால் இந்த கட்டுபாடு பல ஆண்டுகளாக உள்ளது. வழக்கம் போல் இந்த ஆண்டும் வெளவால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பாண்டிகையை  இந்தாண்டும் கொண்டாட முடிவு செய்துள்ளனர் கிராம மக்கள். வெளவால்களை தங்கள் கிராமத்தை காக்கும் தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர். சிரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பட்டாசு வெடிக்க ஆசைபட்டால் கூட அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று வயல் பகுதியில்தான் வெடிக்க வேண்டும் எனவும், பெரம்பூர் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்கள் ஊரில் திருமணம் செய்யும் ஆண்களுக்கும் தங்கள் கிராமத்தின் கட்டுப்பாடு குறித்து முன்னதாகவே தெரிவித்து விடுவதாகவும், இதனால் அவர்களும் தலை தீபாவளி கொண்டாடத்தின் போது பட்டாசு வெடிப்பதை தவிர்த்து விடுகின்றனர்.



ள்


இதேபோன்று  பசுமை நிறைந்து காணப்படுகிறது இக்கிராமத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய நாட்டு பறவை இனங்களான வக்கா, பூ நாரை, நீர் காக்கா உள்ளிட்டவை பல்வேறு பறவை இனங்கள் இக்கிராமத்துக்கு வர தொடங்கியது. அக்டோபர் மாதம் வரும் பறவைகள், மார்ச் மாதம் வரை தங்கி இனப்பெருக்கத்திற்கு பின் தன் குஞ்சுகளுடன் தாயகம் திரும்புவது வழக்கம்.


ஆனால் பெரம்பூர் கிராமத்தின் பசுமை சூழலால் கவரப்பட்ட பறவைகள் தற்போது அங்கேயே நிரந்தரமாக கூடுகள் அமைத்து இங்கேயே தங்கிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் நூற்றுக்கணக்கில் பறவைகள் தங்கியுள்ளது. பறவைகளை எந்த இடையூரும் செய்யாமல் பாதுகாக்கும் கிராம மக்கள் வெளியாட்கள் வேட்டையாடுவதை தடுக்க வேட்டை தடுப்பு குழு அமைத்து பாதுகாத்து வருகின்றனர். தற்போது வயல்வெளிகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் உலா வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இப்பறவைகளை பாதுகாக்க இப்பகுதியில் ஒர் சரணாலையம் அமைக்க வேண்டும், சாலை வசதிகள் செய்து தரவேண்டும் என அரசுக்கு பெரம்பூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Governor Banwarilal Purohit: "தமிழ்நாட்டில் ரூ.50 கோடிக்கு துணைவேந்தர் பதவி "- பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் பகிரங்க குற்றச்சாட்டு!


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற