சீர்காழியில் காலதாமதமாக தொடங்கிய ஜமாபந்தி - பொதுமக்கள் கடும் அவதி

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தால் தாமதமாக தொடங்கிய ஜமாபந்தி நிகழ்வால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். 

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனும் வருவாய் கணக்குத் தீர்வாயம் நடைபெற்றது. ஆனால் காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய ஜமாபந்தி எனும் வருவாய் கணக்குத் தீர்வாயம் முகாம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட முயன்றதால் முதல் நாளிலேயே ஜமாபந்தி தொடங்குவதில் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். 

Continues below advertisement


மேலும், மாதிரவேளுர், வடரங்கம், அகர எலத்தூர், கீழமாத்தூர், அத்தியூர், உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காலை  10 மணி முதல் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளிக்க 2 மணி நேரத்திற்கு மேலாக கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்களுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர். 

Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 6.5 %-ஆக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!


அதனைத் தொடர்ந்து, மிகுந்த காலதாமதமாக தொடங்கி ஜமாபந்தி நடைபெற்றது. மூன்று மணி நேர தாமதத்தால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த வயதான முதியவர்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். முகாமில் பின்னர், பயனாளிகளுக்கு கோட்டாட்சியர் அர்ச்சனா குடும்ப அட்டை மற்றும் முதியோர் உதவி தொகைக்கான சான்றிதழை வழங்கினார். மேலும், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட மனுக்களை பொதுமக்களிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார். இதில் சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய் துறை  அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

செல்போனுக்கு ’குட் பாய்’..... வயல் வெளியில் களம் கண்ட பேரக் குழந்தைகள்! மயிலாடுதுறை சுவாரஸ்யம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola