இந்தியாவில் குடிமக்களுக்கான அடையாள ஆவணத்தின் மிக முக்கியமான ஒன்றாக ஆதார் அடையாள அட்டை மாறியுள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து வருமான வரி தாக்கல் வரை பல அரசுத் திட்டங்கள் என இப்போது அனைத்தும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன. ஆதாரை நிதி சேவைகளுடன் இணைப்பதன் மூலம் அரசு வழங்கும் வெவ்வேறு மானியங்களைப் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற முடியும்.




குறிப்பாக ஒவ்வொருவரின் கைப்பேசி எண் ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்படாவிட்டால்,  அரசு சார்ந்த பல சேவைக பெற அதற்கான மெசேஜை கிடைக்க பெறாது, மக்கள் பெறத் தகுதியான எந்த ஒரு அரசு நன்மைகளையும் பெறுவதில் தடை ஏற்படும். அதே போல தற்போது அரசு மற்றும் பல நிறுவனங்கள் வழங்கும் பல ஆன்லைன் சேவைகளுக்கு OTP மூலம் ஆதார் அட்டை சரிபார்ப்பு தேவைப்படுகிறது. இந்த சேவைகளை நீங்கள் பெற வேண்டுமானால், உங்கள் மொபைல் எண்ணை UIDAI (இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம்) டேட்டாபேஸில் அப்டேட் செய்வது அவசியம். மேலும் பல இளைஞர்கள் ஆதார் குறித்த திருத்தங்களை இணையதள மூலம் தானாக செய்து கொள்கின்றனர். இருப்பினும் ஏராளமானோர் இன்று நாள் கணக்கில் ஆதார் மையங்கில் கால்கடுக்க காத்து கிடக்கின்றனர்.


IIT Suicide : அய்யோ அய்யோவென.. ஐஐடியை உலுக்கும் சாதிய பாகுபாடு குற்றச்சாட்டுகள்? மாணவனின் குடும்பத்தினர் அதிர்ச்சி தகவல்..!





இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் இன்றே கடைசி தேதி மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் நிதி உதவி பெற உள்ளிட்டவைகளுக்கு ஆதார் இணைப்பும் அதனுடன் செல்போன் எண்களை இணைப்பதும் தற்போது அதிரித்து உள்ளது. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் செயல்பட்டு வந்த, நகராட்சி பூங்கா ஆதார் மையம், தமிழிசை மூவர் மணி மண்டபம் பின்புறம் உள்ள ஆதார் மையம், ஸ்டேட் பாங்க், அஞ்சலகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் தற்போது திடீரென மூடப்பட்டுள்ளது.


Pachamalai Hills: ஊர் சுற்றலாம் வாங்க....இயற்கை அழகை தன்னுள் கொண்டுள்ள பச்சைமலை பற்றி பார்ப்போம்




இதனால் தாலுக்காவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமபுற மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல்வேறு சேவைகளை பெற ஆதார் மையத்தை நாடி சென்ற நிலையில் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் ஆதார் மையம் பூட்டிருப்பதை கண்ங செய்வதறியாது திகைத்து போய், ஆதார் மைய வாயிலில் காத்துக் கிடக்கின்றன. இதுகுறித்து ஆதார் மைய பணியாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, சீர்காழியில் செயல்பட்டு வந்த ஆதார் மையங்களை பணிகள் மேற்கொள்ளவேண்டாம் எனவும் கூறி மயிலாடுதுறைக்கு மாற்றுப் பணிக்கு தங்களை உட்படுத்தி உள்ளதால் சீர்காழியில் செயல்படும் ஆதார் மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். எதற்கு எடுத்தாலும் ஆதார் எண்ணை கேட்கும் அரசு இதுபோன்ற இடர்பாடுகள் ஏற்படாமல் உடனடியாக மூடப்பட்ட ஆதார் மையத்தை திறந்து மக்களின் சிரமத்தை போக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


NIA Raids: 3 மாநிலங்கள்.. 40 இடங்களில் சோதனை ஏன்..? அதிகாரப்பூர்வ விளக்கமளித்த என்.ஐ.ஏ.!