புத்தாண்டு என்றாலே கேக்குகளுக்கு தனி இடமுண்டு, பெரும் பங்கும் உண்டு. புத்தாண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி புத்தாண்டு மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்கின்றனர். அந்த வகையில் கேக் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பேக்கரிகள், தங்களின் தனி திறமையை வெளிப்படுத்தும் விதமாக கேக்குகளில் என்ன புதுமையை செய்து காண்பிக்க முடியுமோ அதனை செய்து வருகின்றனர்.




அதன் ஒன்றாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள தனியார் பேக்கரி நிறுவனம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு பல வகையான கேக்குகளின் கண்காட்சி வைத்துள்ளது. இந்த கண்காட்சியில் கண்ணை கவரும் வகையில் 500 -க்கும் மேற்பட்ட வடிவங்களில், நூறு வகையான சுவைகளில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் இடம் பெற்றிருந்தன. மூன்று அடி உயரத்தில் ராக்கெட் கேக், இன்டர்நேஷனல் ஸ்வீட், அரபிக் பெல்ஜியம் சாக்லேட் கேக் வகைகள், ரசமுல்லா கேக், சாக்கோ கேமல் க்ரென்ச் கேக், ஸ்ராபெரி கேக் பொம்மை வடிவிலான விதவிதமான கேக்குகள் உள்ளிட்ட பல்வேறு கேக்குகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 




மேலும் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த கேக் கண்காட்சியில் கலந்து கொண்டு கேக் வகைகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தும் கண்டு ரசித்தனர். புதிய வகை கேக்குகளை  ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர்.  நியூ இயர் பண்டிகைக்காக கண்ணை கவரும் வகையில் விதவிதமாக கேக்குகளை செய்து வைத்து கேக் கண்காட்சி நடத்திய நிறுவனத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர். 


புத்தாண்டை முன்னிட்டு காவலர்களுக்கும் பொது மக்களுக்கும் நல்லுறவு வளர்க்கும் விதமாக மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.


நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் மயிலாடுதுறை  பழைய பேருந்து நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு நல்லுறவை வளர்க்கும் விதமாக பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். 




தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவலர் குடியிருப்பில் காவலர் குடும்பங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமதி நிஷா காவலர் குடும்பத்தினர் குழந்தைகளுடன் கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து காவலர் குடும்பத்தினருக்கு இனிப்புகளை வழங்கினார். 


Officers Promotion and Transfer : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உட்பட 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அதிரடி..




நிகழ்ச்சியில் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதேபோல் மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்று பிரார்த்தனை செய்தனர். புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற