மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9 -ஆம் ஆண்டு நினைவு தினம் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை மற்றும் இயற்கை வழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் நம்மாழ்வாரின் படத்திற்கு மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தபட்டது.
இந்த நிகழ்வில் இயற்கை விவசாயிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், லயன் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள், சீர்காழி வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர் என்று அஞ்சலி செலுத்திய பின்னர் அரசுக்கு கோரிக்கை வைத்து உறுதி மொழியும் ஏற்றனர்.
செறிவூட்டபட்ட செயற்கை அரிசியை பொது வினியோக திட்டத்தில் ஏப்ரல் 1 தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். இத்திட்டத்தில் விவசாயத்திற்கும் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்ககூடியதாக உள்ளதால், இதனை தடை செய்யவேண்டும் என மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
நம் மரபிற்கு மாறாகவும், நம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்ககூடிய செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசியை முறையான ஆய்வுகளின்றியும் முறையான பரிந்துரை இன்றியும் ரேசன் கடைகள் மூலம் வழங்குவதை நாங்கள் வாங்கவும், உண்ணவும் மாட்டோம் என்றும், இத்திட்டம் உணவு உரிமையை பறிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் செரிவூட்டபட்ட செயற்கை அரிசி பற்றிய விழிப்புணர்வை அரசுக்கும் மக்களுக்கும் கொண்டு சேர்க்கவும், தமிழ்நாட்டு மக்களை சோதனை எலிகளாக மாற்றாமல் காப்பாற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று விவசாயிகள் பொதுமக்களும் உறுதியேற்றனர்.
இதேபோல் மயிலாடுதுறையில் நடைபெற்ற நம்மாழ்வார் நினைவு தினம்.
மயிலாடுதுறையில் இயற்கை விவசாயி நம்மாழ்வார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்வில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசியை வாங்கி உண்ண மாட்டோம் என விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனர். மயிலாடுதுறையில் இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் 9 -ஆம் ஆண்டு நினைவு தினம் பல்வேறு இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் யாழ் வேளர் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று.
இந்நிகழ்வில், கலந்துகொண்ட விவசாயிகள் நம்மாழ்வார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செரிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக, நம் மரபிற்கு மாறாகவும் நம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்ககூடிய செறிவூட்டபட்ட செயற்கை அரிசியை முறையான ஆய்வுகளின்றியும் முறையான பரிந்துரை இன்றியும் ரேசன் கடைகள் மூலம் வழங்குவதை நாங்கள் வாங்கவும், உண்ணவும் மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, மரக்கன்றுகள் நட்டு நம்மாழ்வாருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
Pudukkottai Issue: குடிநீரில் மலம் கலந்தவர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு - திருச்சி டி.ஐ.ஜி உத்தரவு
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற