பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட 2007 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்  தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று வெளியான அறிவிப்பில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.


இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், 1999 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த பிரஜேந்திர நவ்னீத், ஆஷிஷ் சட்டர்ஜி, சன்சோங்கம் ஜடாக் சிரு, தேவ் ராஜ் தேவ் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் 2007 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த வீரராகர ராவ், நந்தகுமார், லதா, சுந்தரவள்ளி, சரவண வேல்ராஜ், சுப்பையன், தக்‌ஷினா மூர்த்தி ஆகிய 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு  super time scale ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


2010 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்ட 14 பேருக்கு செலக்‌ஷன் கிரேட் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


இதேபோல் 2014 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு junior administrative grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  


ஐபிஎஸ் அதிகாரிகள் 



ஐபிஎஸ் அதிகாரிகளில் 2010 பேட்சை சேர்ந்த அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார் தாக்கூர், மகேஷ், தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி,ராமர் ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 5 ஐஜிக்கள் ஏடிஜிபிக்கள் ஆகவும், 5 டிஐஜிக்கள் ஐஜி ஆகவும், 16 எஸ்பிக்கள் டிஐஜிக்கள் ஆகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 


 



  • அருண் - சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி 

  • கல்பனா நாயக் -  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி 

  • நரேந்திரன் நாயர் - மதுரை காவல் ஆணையர் (பதவி உயர்வு)

  • பிரவீன் குமார் அபிநபு - திருப்பூர் காவல் ஆணையர் (பதவி உயர்வு)

  • சத்திய பிரியா - திருச்சி காவல் ஆணையர் (பதவி உயர்வு)

  • கார்த்திகேயன் - மத்திய மண்டல ஐஜி

  • விஜயகுமார் - கோவை சரக டிஐஜி (பதவி உயர்வு)

  • துரை - ராமநாதபுரம் சரக டிஐஜி (பதவி உயர்வு)

  • அபிநவ் குமார் - திண்டுக்கல் சரக டிஐஜி (பதவி உயர்வு)

  • பகலவன் - காஞ்சிபுரம் சரக டிஐஜி (பதவி உயர்வு)

  • ஜெயச்சந்திரன் - தஞ்சாவூர் சரக டிஐஜி (பதவி உயர்வு)

  • ராஜேஸ்வரி - சேலம் சரக டிஐஜி

  • ராஜேந்திரன் - திருநெல்வேலி காவல் ஆணையர்

  • ஷியாமளா தேவி - பெரம்பலூர் எஸ்பி

  • மோகன்ராஜ் - கள்ளக்குறிச்சி எஸ்பி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்