பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசை கலைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். தொடர்ந்து ஆளும் கட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில், எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்தில் இம்ரான் கானுக்கு ஆதரவளித்து வந்த எம்.க்யூ.எம் கட்சி, தங்களது ஆதரவை எதிர்கட்சிக்கு அளித்தது. இதனால் இம்ரான் கான் அரசின் பலம் 342 இடங்களில் 164 ஆக குறைந்தது.


அதனை அடுத்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில், ஆந்நாட்டு அதிபர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் அங்கு அசாதாராண சூழல் நிலவியது. இதனால், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைந் நடத்தியது. வழக்கு முடிவில், மீண்டும் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. 


இதனை முன்னிட்டு நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் இம்ரான் கான், இந்தியா குறித்தும் பேசி இருக்கிறார். ”பாகிஸ்தான் ரஷ்யாவுக்கு எதிராக பேச வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுத்தன. ஆனால், இந்தியாவுக்கு அந்த அழுத்தத்தை தர முடியவில்லை. இந்தியா இறையாண்மை கொண்ட நாடு. அதனால், அழுத்தம் தர முடியவில்லை. இந்தியாவில் எந்த நாடாலும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. ரஷ்யா -  உக்ரைன் பிரச்சனையில் எந்த பக்கமும் இந்தியா நிற்காதபோதும், இந்தியாவுக்கு எதிராக எந்த நாடும் நிற்க முடியாது. இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.


2018ல் பிரதமரான இம்ரான் கானின் ஆட்சி காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனிடையே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை கா