மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாத  கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, காலி மனை வரி உள்ளிட்ட பல்வேறு இனங்களின் மூலம் நகராட்சிக்கு வரி வருவாய் வருகிறது. மேலும் நகராட்சிக்கு சொந்தமான நகரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் வாடகை மூலமாகவும் வருவாய் வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சியில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சமாளிக்க நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நீண்ட  காலமாக வாடகை பாக்கி வைத்துள்ளவர்களுக்கு உடனடியாக  வாடகை பாக்கியை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.




இந்த நோட்டீஸ் பெற்றும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர்  சீல் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நகராட்சி வருவாய் அலுவலர் தினகரன் தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் மயிலாடுதுறையில் உள்ள காந்தி ஜி சாலை, டவுன் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் வாடகை செலுத்தாத 10 நகராட்சி கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். 


Mumbai: மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்...




வாடகை செலுத்தாத நகராட்சிக்கு சொந்தமான அனைத்து கடைகளிலும் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என நகராட்சி ஆணையர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை மார்கெட் மதிப்பை விட மிக குறைவு, ஆகையால் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை நடத்தி வருபவர்கள் அரசுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முறையாக வாடகையினை செலுத்தி அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என கருத்து தெரிவித்தனர்.


Morning Headlines: தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.. சிறையில் தவிக்கும் சந்திரபாபு நாயுடு.. இன்றைய முக்கியச் செய்திகள்..