தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெப்பத்தை சமாளிக்க பல மாவட்டங்களில் குறிப்பிட்ட கால வேளையில் வீடுகளை விட்டு மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அது ஒருபுறம் இருந்தாலும், திமுக, அதிமுக, என கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சியினரும் பொது மக்களுக்கு தண்ணீர் பந்தலும் மோர் பந்தலும் போட்டி போட்டுக் கொண்டு திறந்து வருகின்றனர்.




அவ்வாறு திறக்கப்படும் மோர், தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்ட நாள் மட்டுமே, தண்ணீர், இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், என கலை கட்டுவதும், அதனைத் தொடர்ந்து, மோர்பந்தலில் அவர்கள் வைக்கப்பட்ட விளம்பர பதாகியை தவிர்த்து, பச்ச தண்ணீர் கூட இன்றி காலி குடங்களே காத்து வாங்கிக் கொண்டிருப்பதையும் மக்கள் கண்கூடாக காணும் ஒரு எதார்த்த நிகழ்வு. இந்நிலையில் மயிலாடுதுறையில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மோர் பந்தலில் சற்று கூடுதல் வித்தியாச நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.


Yaathisai Review: 7ஆம் நூற்றாண்டுக்கே பயணம்..! பாண்டியரை எதிர்க்கும் சிறு இனக்குழு..! எப்படி இருக்கிறது யாத்திசை?




மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு கடைவீதியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் ஒன்று திறக்கப்பட்டது. மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லி பிரகாஷ் ஏற்பாட்டின் பேரில் நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது. இதில் பொது மக்களுக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் குடைகளை வழங்கி குளிர்ச்சி தரும் வகையில் நீர் மோர், இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 


12 Hours Labour Law: தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை கட்டாயமா? அமைச்சர் சொல்வது என்ன?




தொடர்ந்து கடும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பண்டைய தமிழர் முறைப்படி வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் நல்லெண்ணெய் மற்றும் சீயக்காய் பொடி வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு பலரையும் வெகுவாக கவர்ந்து பாராட்டுகளையும் பெற்றது.


Arts and Science Colleges: கோடை, செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு எப்போது?- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண