மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக இன்று அதிகாலை தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள நடப்போம் நலம் பெறுவோம் (ஹெல்த் வாக்) என்ற திட்டத்திற்காக இடத்தினை மயிலாடுதுறை தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பால்பண்ணையில் கட்டப்பட்டு வரும் புதிய  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயிற்சி மேற்கொண்டு அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்துள்ளார்.




அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை கிட்டப்பா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேசியக் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக  மாநில அளவில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.


CM MK Stalin: தமிழ்நாட்டின் உரிமையை கேட்டால் பிரிவினையா? - கொந்தளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்




மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மருத்துவத்துறை இயக்குனர் செல்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சியில் சேதமடைந்த மற்றும் வாடகை கட்டடத்தில் இயங்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை கூட நிரந்தர கட்டிடத்திற்கு மாற்ற முயற்சி அதிமுக அரசு மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினார். 


Koyambedu Market: கோயம்பேடு சந்தையை மூடி, வணிக மையம் அமைக்கத் துடிப்பதா?- அன்புமணி கண்டனம்




மேலும் தொடர்ந்து பேசிய அவர், எம்பிக்கு ஆண்டுகளுக்கு 5 கோடி ரூபாயும், எம்எல்ஏவுக்கு ஆண்டிற்கு 3 கோடி ரூபாயும் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த மேடையில் ஒரு எம்பி,  3 எம்எல்ஏக்கள் இருக்கிறீர்கள், நெஞ்சில கை வச்சு சொல்லுங்க இதுல யாராவது ஒருவர் என்னோட துறைக்கு நிதி வழங்கி இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அப்போது அவரது ஆதங்கத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தான் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.


Entertainment Headlines Aug 17: ரூ.375 கோடி வசூல் செய்த ஜெயிலர்.. சொகுசு கார் வாங்கிய லோகேஷ்.. இன்றைய சினிமா செய்திகள்..!




இதையடுத்து அமைச்சர் அவருக்கு நன்றி தெரிவித்தார். மயிலாடுதுறையில் உள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்களில் இருவர் திமுகவை சேர்ந்தவர்கள், மேலும் ஒருவர் கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவாக இருந்தும் அமைச்சர் பொது மேடையில் பகிரங்கமாக இவ்வாறு கேள்வி எழுப்பியது அவர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது.